AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்.. உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக அரசு.. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!!

Karnataka Moves Supreme Court: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் கொள்கை ஒப்புதல் இன்றிப் பணிகள் நடைபெறுவதாகவும், சரபங்கா மற்றும் தடுப்பணைத் திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்.. உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக அரசு.. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!!
காவிரி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Nov 2026 14:18 PM IST

கர்நாடகா, நவ.24: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் எதையும் பெறாமல் இந்தத் திட்டப்பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகக் கர்நாடக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்குவதற்கும், இந்தத் திட்டத்தைத் தேசியத் திட்டமாக அறிவிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கர்நாடக அரசு முன்வைத்துள்ளது. காவிரி இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவைத் தாண்டி கூடுதல் நீரைப் பயன்படுத்துவதற்குத் தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை எனவும், இந்த இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது எனவும் கர்நாடகா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை! ரகசிய தகவல்களைப் பகிர வேண்டாம் – வெப் லாகின் மூலம் மோசடி அபாயம்

தடுப்பணை திட்டங்களுக்குத் தடை கோரிக்கை:

மாநிலங்களின் எல்லையான பிலிகுண்டுலு வரையிலான நீர் கர்நாடகத்திற்கு உரியது எனக் குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, மேட்டூரிலிருந்து உபரி நீரைச் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சரபங்கா திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல, பொதுக்கட்டளை நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் ஆதனூரில் குண்டாற்றுக்குக் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கும், ராஜவாய்க்கால் வடிகால் நீர்ப்பாசனத் திட்டம், நொய்யல் ஆறு திட்டம் மற்றும் கல்லணை வடிகால் திட்டம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட கட்டுமானங்களை இடிக்க கோரிக்கை:

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இந்த இணைப்புத் திட்டம் தொடர்பான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்திடமிருந்து தமிழ்நாடு அரசு மறைத்துள்ளதாகக் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதற்கட்டத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி இந்தக் கூடுதல் மனுவை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிக்க: முதலீட்டுத் தரவரிசையில் சீனாவை நெருங்கிய இந்தியா… பிரதமர் மோடி தலைமைத்துவத்துக்கு 2வது இடம்!

டிச.10-ஆம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்பு:

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் பிற நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாகக் கர்நாடக அரசு முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கைகள், நீர்வளப் பங்கீடு விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த இடையீட்டு மனு வரும் டிசம்பர் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us