AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடலுக்கு அடியில் அதிவேக பயணம்.. பல கி.மீ. ஆழத்தில் பிரம்மாண்ட ரயில் நிலையம்.. மும்பை டு அகமதாபாத் இடையே பணிகள் தீவிரம்!

Mumbai To Ahmedabad Undersea Railway Route : மும்பை டு அகமதாபாத் இடையே கடலுக்கு அடியில் ரயில் வழித்தடம் மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடலுக்கு அடியில் அதிவேக பயணம்.. பல கி.மீ. ஆழத்தில் பிரம்மாண்ட ரயில் நிலையம்.. மும்பை டு அகமதாபாத் இடையே பணிகள் தீவிரம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Nov 2026 10:23 AM IST

மும்பை முதல் அகமதாபாத் வரை புல்லட் ரயில்களை இயக்குவதற்கான நாட்டின் முதல் 505 கிலோமீட்டர் தொலை உள்ள அதிவேக ரயில் வழித்தடம், நிலத்தடி ரயில் நிலையம் மற்றும் கடல்வழி சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் முதல் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக 3200 டன் எடை கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இயந்திரமானது சிற்றாற்றின் அடியில் உள்ள பாறையை துளைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள பாந்த்ரா- குர்லா வளாகத்தில் ( பி. கே. சி) 10 மாடி கட்டடத்தின் உயரத்தை விட அதிகமான ஆழத்தில் நிலத்தடி ரயில் நிலையத்தை உருவாக்கி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி ரயில் நிலையம், பிளாட்பார்ம், பயணிகள் கூடம்

இந்த ரயில் நிலையமானது, ரயில் வழித்தடத்தின் தொடக்கப் புள்ளியாக செயல்படும். மும்பையின் வணிக மாவட்டத்தின் மையப்பகுதியில், இந்த ஒரே நிலத்தடி நிலையத்தை ரயில்வே துறையினர் உருவாக்கி வருகின்றனர். இது ஒரு தனித்துவமான பொறியியல் சாதனையாகும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த நிலத்தடி ரயில் நிலையம், பிளாட்பார்ம்கள், பயணிகள் கூடம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை உள்ளடக்கிய 3 அடுக்குகளை கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஒழுங்கு முறை.. விரைவில் வருகிறது புதிய திருத்தம்.. மத்திய அரசு திட்டம்!

சூரத் நகரில் வைர முகப்புடன் ரயில் நிலையம்

அதன் 6 நடைமுறைகளில் ஒவ்வொன்றும் சுமார் 400 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாக இருக்கும். இது அதிவேக ரயில்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அமையும். அத்துடன், இந்த வழித்தடத்தில் உள்ள மற்ற நிலையங்கள், நகரங்களின் தனித்துவமான அடையாளங்கள், கலாச்சாரங்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். மேலும், உதாரணமாக வைர தொழிலுக்கு பெயர் பெற்ற சூரத் நகரில், வைரங்களால் ஈர்க்கப்பட்ட முகப்புடன் கூடிய ஒரு ரயில் நிலையம் அமைய உள்ளது.

2027- ஆம் ஆண்டு இறுதிக்குள் புல்லட் ரயில் சேவை

அடுத்த ஆண்டு 2027- இறுதிக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயணம் சூரத் ரயில் நிலையத்தில் இருந்து வாபிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை இயற்கை ஒளியின் கீழ் அமைப்பதற்கு ஒரு பிரத்தியேக மேற்கூரை ஒளி அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் உள்ள பி. கே. சி. மற்றும் ஷில் பாட்டா இடையே 7 கடலடி சுரங்கங்கள் உள்பட 21 கிலோமீட்டர் தொலைவுள்ள சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியே இல்லை.. பாஜக ஆட்சியில் அதிக பொருளாதார வளர்ச்சி.. அமித் ஷா பெருமிதம்!

Follow Us