AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இரண்டு வானம் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Irandu Vaanam Movie Second Single Update | நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

இரண்டு வானம் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
இரண்டு வானம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Nov 2026 11:42 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்தே தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாவது பாகமும் கட்டா குஸ்தி மட்டும் இன்றி குடும்ப வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவாகி இருந்தது. முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாவது பாகமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

இரண்டு வானம் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது?

அதன்படி இந்த இரண்டு வானம் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த இரண்டு வானம் படத்தில் இருந்து நாளை 23-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த இரண்டு வானம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் ராம்குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… வெளியானது ஜெயிலர் 2 படத்திலிருந்து அன்ஃபினிஷ்ட் பிசினஸ் தீம்!

இரண்டு வானம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சம்பவம் காத்திருக்கு… பிக்பாஸில் இந்த வார நிகழ்வு குறித்து பேசும் விஜய் சேதுபதி!

Follow Us