AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் டப்பிங்… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

Irandu Vaanam Movie Dubbing Completed | நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்து உள்ளது.

நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் டப்பிங்… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
இரண்டு வானம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 14:47 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பிசியாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.

அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி 2 படத்திற்கு முன்னதாகவே இந்த இரண்டு வானம் படத்தின் அறிவிப்பு வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜூ முதன்முதலாக கமிட்டான படம். ஆனால் இந்தப் படம் வெளியாக தாமதமான காரணத்தால் முன்னதாக பலப் படங்கள் தமிழ் மொழியில் மமிதாவின் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நிறைவடைந்தது இரண்டு வானம் படத்தின் டப்பிங்:

அதன்படி இந்தப் படத்தின் அப்டேட்கள் தற்போது தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு வானம் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மமிதா பைஜூ மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் டப்பிங் பேசுவதும் தெரிகிறது. இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சாய் பல்லவியிடம் முதன்முதலில் பேசியது அப்போதுதான் – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன விசயம்

இரண்டு வானம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஹாய் சாதிகா… கேள்விகளால் சாதிகாவை மிரளவைத்த லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

Follow Us