அருண்ராஜா காமராஜுடனான கூட்டணி முறிவை உறுதி செய்த விஷ்ணு விஷால் – வைரலாகும் போஸ்ட்!
Actor Vishnu Vishal X Post Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் அடுத்ததாக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக இருந்த படம் தற்போது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலை விஷ்ணு விஷால் உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். நிஜ வாழ்க்கையில் ஸ்போர்ட்ஸ் பர்சனாக இருக்கும் இவர் அவ்வபோது ஸ்போர்ட்ஸ் ட்ராமா படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மற்றப் படங்களைவிட இந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடன் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்திற்காக கூட்டணி வைத்ததாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானது. மேலும் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த போது படம் நின்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது. இதனை தற்போது நடிகர் விஷ்ணு விஷால் உறுதி செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




அருண்ராஜா காமராஜுடனான கூட்டணி முறிவை உறுதி செய்த விஷ்ணு விஷால்:
அதன்படி விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக, இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் நான் அடுத்ததாக பணியாற்றவிருந்த படம் குறித்து பல்வேறு தகவல்களும், யூகங்களும் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெளிவுபடுத்துவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவர்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த பத்து மாதங்களாக இந்தப் படத்திற்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். கட்டா குஸ்தி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது.
இந்தப் படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.ஆனால், சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டது.. உண்மையில், தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சினையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவர். இந்தப் படத்தை சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A note from producer Vishnuu Vishal. pic.twitter.com/Bwp82D7Y3E
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 11, 2026
Also Read… நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் ஒன் லைன் இதுதானா? வைரலாகும் அப்டேட்