அருண் விஜயின் 38-வது படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ
Arun Vijays 38th film update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் 38-வதாக உருவாக உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டே தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும் ஆரம்ப காலக்கட்டத்தில் இவருக்கு சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த 15 வருடங்களாகதான் நடிகர் அருண் விஜய்க்கு சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து அருண் விஜய் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதில் அஜித் குமாருக்கு வில்லனாக நடித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஏறுமுகமாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இறுதியக அருண் விஜய் நடிப்பில் வெளியான ரெட்ட தல படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




அருண் விஜயின் புது படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அதன்படி நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் 38-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது வெளியாகும் என்பது குறித்து நடிகர் அருண் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற 12-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா? இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்
நடிகர் அருண் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
My next with Director #Muthaiya #AV38 The TITLE & FIRST LOOK will be unveiled on August 12th!!
A powerful new chapter begins! 🔥
#NethajiProductions Production No.2 💥@dir_muthaiya @s_v_pandian @nethajifilm1032 @thondankani @mirnaaofficial @highonkokken… pic.twitter.com/72pomKl6l1
— ArunVijay (@arunvijayno1) August 10, 2026
Also Read… வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? இயக்குநர் ராஜமௌலி விளக்கம்