AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா? இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்

Director Venky Atluri talks about Lucky Baskhar Movie | தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் உருவான லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா இல்லையா என்பது குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.

லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா? இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்
லக்கி பாஸ்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 14:07 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் லக்கி பாஸ்கர். ப்ளாக் காமெடி ஹீஸ்ட் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார். துல்கர் சல்மான் ஒரு படத்தை தேர்வு செய்து நடிக்கிறார் என்றால் அந்தப் படம் நிச்சயமாக சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் படத்தைப் பார்க்கின்றனர். அதற்கு கார்ணம் துல்கர் சல்மானின் கதை தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு படத்திற்கு யெஸ் சொல்கிறாரா? நோ சொல்கிறாரா என்பதை பொருத்தே அந்தப் படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் துல்கர் சல்மானி லக்கி பாஸ்கர் படம் சூப்பர் ஹிட் அடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி மேனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த லக்கி பாஸ்கர் படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் பிரபலமாக இருந்த இயக்குநர் வெங்கி அட்லூரி பான் இந்திய மொழிகளிலும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா?

அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, லக்கி பாஸ்கர் படம் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் (biopic) அல்ல. இது ஒரு கற்பனைக் கதைதான், ஆனால் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் போன்ற உணர்வைத் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஒரு ஃபேமிலி டிராமா (குடும்பப் பின்னணியிலான கதை) என்று சொல்லும்போது, ​​இதில் குடும்பம் சார்ந்த அம்சமே முதன்மையாக இருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடிப் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கவே நான் விரும்பினேன் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஒன்னு நெனச்சா பத்து நடக்கும்… இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 புரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… BKU: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லஹேம் குடும்பா யூனிட்’ படத்தின் கதை இதுவா?

Follow Us