AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துபாய் மாப்பிள்ளை ரிஷிகாந்த்.. அமைதியான மருமகளாக அனிஷிமா – வைரலாகும் மொத ராத்திரி பட கேரக்டர் போஸ்டர்ஸ்!

Modha Rathiri Movie Character Posters: தமிழ் சினிமாவில் படங்களில் துணை வேடங்கள் மற்றும் நெகடிவ் வேடங்களில் நடித்து பிரபலமானவர் ரிஷிகாந்த். இவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது படம்தான் மொத ராத்திரி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

துபாய் மாப்பிள்ளை ரிஷிகாந்த்.. அமைதியான மருமகளாக அனிஷிமா – வைரலாகும் மொத ராத்திரி பட கேரக்டர் போஸ்டர்ஸ்!
மொத ராத்திரி படத்தின் கதாபாத்திரங்கள் போஸ்டர்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Aug 2026 21:29 PM IST

குட் பேட் அக்லி (Good Bad Ugly) மற்றும் டியூட் (Dude) போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து, ஹிட் கொடுத்திருக்கும் நிறுவனம்தான் மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers). இந்த நிறுவனத்தின் கீழ் தமிழில் 3வது படமாக உருவாகியுள்ளதுதான் மொத ராத்திரி (Modha Rathiri). இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி (Raja Karuppasamy) இயக்க, மைத்ர்ட்டி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமானது குடும்ப கதை மற்றும் காதல் கதைக்களத்தை மையமா கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரிஷிகாந்த் (Rishikanth) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனிஷிமா அனில்குமார் (Anishma Anilkumar) நடித்துள்ளார். இவர் தமிழில் சிறை மற்றும் யூத் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் தமிழில் 3வது நடிக்கும் படமாக இந்த மொத ராத்திரி திரைப்படம் அமைந்துள்ளது. இதில் நடிகர் ரிஷிகாந்த் துபாய் மாப்பிள்ளை “மருதநாயகம் என்ற வேடத்திலும், நடிகை அனிஷிமா அனில்குமார் அடக்கமான பொண்ணு “முத்து செல்வி” என்ற வேடத்திலும் நடித்துள்ளார்களாம். அந்த வகையில் இப்படத்தின் நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: விஷாலின் மகுடம் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!

நடிகர் ரிஷிகாந்த்தின் கதாபாத்திர அறிமுகம் குறித்து மொத ராத்திரி படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகர் ரிஷிகாந்த் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூலி படத்தில் சௌபின் ஷாஹிருடன் முக்கிய வேடத்திலும், பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தில் அவரின் காதலனாகவும் நடித்திருந்தார். இதையடுத்து இவர் முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்தான் மொத ராத்திரி.

இதையும் படிங்க: எனது அந்தப் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க வேண்டியது – மாதவன் சொன்ன விசயம்!

நடிகை அனிஷிமா அனில்குமாரின் கதாபாத்திரம் குறித்து மொத ராத்திரி படக்குழு வெளியிட்ட போஸ்டர் பதிவு:

மொத ராத்திரி படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த மொத ராத்திரி திரைப்படமானது குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம். இதில் ரிஷிகாந்த், அனிஷிமா, சேத்தன், பிஜாக்ஸ், அப்துல் லீ, வெங்கடேசன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பாரத் சங்கர் இசையமைக்க பாடல்களும் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

Follow Us