AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எனது அந்தப் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க வேண்டியது – மாதவன் சொன்ன விசயம்!

Actor Madhavan talks about Nala Damayanthi movie | நடிகர் மாதவன் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனது அந்தப் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க வேண்டியது – மாதவன் சொன்ன விசயம்!
மாதவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2026 17:52 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் மாதவன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நள தமயந்தி. இந்தப் படத்தை இயக்குநர் மௌலி இயக்கி இருந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் மௌலி இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர்கள் சாரு ஹாசன் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர்.

நடிகர் மாதவன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நாயகியாக கீது மோகன் தாஸ் நடித்து உள்ளார். இவர்தான் தற்போது நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் என்ற படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக டாக்ஸிக் படத்திற்காக கீது மோகன் தாஸ் பெயர் அதிக அளவில் செய்திகளிலும் இடம் பிடித்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மாதவன் நள தமயந்தி படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நள தமயந்தி படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க வேண்டியது:

அந்தப் பேட்டியில் நடிகர் மாதவன் பேசியதாவது, நள தமயந்தி திரைப்படம் உண்மையில் கமல் ஹாசன் சார் நடிக்கவிருந்த ஒன்று என்று கூறினார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு அவர் தாராள மனதுடன் எனக்கு வாய்ப்பளித்தார். அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் சார் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் அடிப்படையிலேயே நள தமயந்தி படத்தில் எனது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. இப்படம் வெளியானபோது வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால், நான் மிகச் சிறந்ததாகக் கருதும் பல படங்கள் துரதிர்ஷ்டவசமாக வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

Also Read… ஜன நாயகன் படத்தில் அந்த காட்சி விஜய் சாருக்கு ரொம்ப பிடித்தது – இயக்குநர் எச். வினோத் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ் – வைரலாகும் வீடியோ

Follow Us