AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் தமிழ்படம் 3 ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

Tamizh Padam 3 movie Shoot begins soon | தமிழ் சினிமா ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் தமிழ்படம் 3 ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
மிர்ச்சி சிவாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2026 16:50 PM IST

ரேடியோவில் ஆர்.ஜே.வாக தனது பணியை முதன்முதலில் தொடங்கினார் நடிகர் சிவா. அவர் ரேடியோவில் வேலை செய்த போதே அவருக்கு மிர்ச்சி சிவா என்று பெயர் வந்தது. அதனைத் தொடர்ந்து சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் சிவா கடந்த 2007-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சென்னை 28 படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சிவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தமிழ் படம்.

இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலில் மற்றும் தமிழில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய படங்களை ட்ரோல் செய்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த தமிழ் படம் என்ற படத்திற்கு பிறகு தான் நடிகர் மிர்ச்சி சிவாவை ரசிகர்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் தமிழ்படம் 3 ஷூட்டிங் எப்போது?

தமிழ்ப்படம் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இரண்டாம் பாகத்திற்குப் பிறகு, சினிமாவிலும் அரசியலிலும் பல புதிய விஷயங்கள் நடந்துள்ளன. நையாண்டி செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, சினிமாவில், கே.ஜி.எஃப் மற்றும் புஷ்பா பாணி படங்கள், லோகி பாணி படங்கள் (சிறப்புத் தோற்றங்கள், வன்முறை, துப்பாக்கிகள், பழங்காலப் பாடல்கள்), நெல்சன் பாணி படங்கள், பான் இந்தியத் திரைப்படப் போக்குகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. அரசியலில், எந்தவொரு திரைப்படத்தையும் விட தேர்தல் காலமே ஒரு பெரிய நாடகமாக இருந்தது. இந்த முறை சி.எஸ். அமுதன் என்ன கொண்டு வரப் போகிறார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் உலக அரசியல் குறித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தில் அந்த காட்சி விஜய் சாருக்கு ரொம்ப பிடித்தது – இயக்குநர் எச். வினோத் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ் – வைரலாகும் வீடியோ

Follow Us