AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா மூக்குத்தி அம்மன் 2 படம்? வைரலாகும் தகவல்

Mookuthi Amman 2 Movie Release Update | நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தின் வெளியீட்டு தீபாவளி பண்டிகைக்கு இருக்காது என்று தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா மூக்குத்தி அம்மன் 2 படம்? வைரலாகும் தகவல்
மூக்குத்தி அம்மன் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2026 11:07 AM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் படங்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா நடிப்பில் மீண்டும் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி முன்னதாக நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தான் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி நடித்து இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரைப் பார்க்கும் போது இந்தப் படம் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அதிக பொருட் செலவில் உருவாகி உள்ளது என்பது தெரிகிறது. மேலும் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பர்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வெளியீடு ஒத்திப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா மூக்குத்தி அம்மன் 2 படம்?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, சுந்தர் சி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சமீபத்தில் வெளியான அதன் டீசர் இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, அதில் இடம்பெற்ற சிஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு வீடியோ கேம் போல இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இப்படத்திற்காகத் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சுமார் 100 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிலையில், படத்தை அவசர அவசரமாகத் திரையரங்குகளுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளைச் சீரமைத்து மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதால், மூக்குத்தி அம்மன் 2 தீபாவளி வெளியீட்டுப் போட்டியிலிருந்து விலகியுள்ளது.

Also Read… பெருமையாக இருக்கிறது மாப்ள… அசோக் செல்வனை பாராட்டிய சூர்யா

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நானியின் தி பாரடைஸ் படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம்

Follow Us