AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அந்த விசயங்கள் சாதாரணமானது இல்லை… சொந்த வாழ்க்கை குறித்து பேசிய நடிகை நயன்தாரா

Nayanthara about balancing work and motherhood | தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிப்பு மற்றும் அம்மா என இரண்டையும் ஒரே நேரத்தில் சமமாக பார்ப்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

அந்த விசயங்கள் சாதாரணமானது இல்லை… சொந்த வாழ்க்கை குறித்து பேசிய நடிகை நயன்தாரா
நயன்தாரா - விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Aug 2026 08:00 AM IST

மலையாள சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பான் இந்திய மொழிகளில் நடித்து இருந்தாலும் அதிக அளவில் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான டாக்ஸிக் படத்தின் மூதல் கன்னட சினிமாவில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. யாஷ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் பல நாயகிகளுடன் நடிகை நயன்தாராவும் நடித்து உள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஹாய். இந்தப் படத்தை அவரே தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாய் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக சமீபத்தில் அதிக அளவில் பேட்டிகளை கொடுத்து வந்தார் நடிகை நயன்தாரா. அப்படி அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் படங்கள் குறித்து மட்டும் அல்லாமல் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அப்படி நடிகை நயன்தாரா பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

சொந்த வாழ்க்கை குறித்து பேசிய நடிகை நயன்தாரா:

இரண்டு சிறு சிறுவர்களின் தாயாக இருந்து கொண்டே, உங்கள் பரபரப்பான திரைப்படப் பணிகளை எவ்வாறு சமன் செய்கிறீர்கள் என்று பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வேலையையும் தாய்மையையும் சமன் செய்வது எளிதல்ல. ஆனால் என் மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகியோரே எனது மிகப்பெரிய பலம் என்று நயன்தாரா கூறினார். அவர்களுடன்  நேரத்தைச் செலவிடும் வகையில் எப்போதும் எனது வேலைக்கான அட்டவணையை நான் கவனமாகத் திட்டமிடுகிறேன். குடும்பத்தின் ஆதரவும் இதில் மிக முக்கியமானது. என் மகன்களுடன் இருக்கும்போது, ​​நான் முழுமையாக அவர்களுடன் ஒன்றிணைந்து இருக்கிறேன். அதுவே என்னை நிதானமாகவும் இயல்பாகவும் வைத்திருக்க உதவுகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Also Read… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான் – உறுதி செய்த இயக்குநர்

Follow Us