AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான் – உறுதி செய்த இயக்குநர்

Director Ashwath Marimuthu talks about STR 51 Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான் – உறுதி செய்த இயக்குநர்
சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2026 14:11 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ஓ மை கடவுளே. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டிராகன் என்ற படத்தை எழுதி இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசனின் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கான பணிகளில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தீவிரம் காட்டி வந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்துவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக சிலம்பரசனின் படத்தை நிறுத்திவிட்டு அந்தப் படத்தின் பணியைத் தொடங்கினார்.

தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான்:

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியதாவது, தமிழ் சினிமாவில் உள்ள நாங்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள். ரஜினி அவர்களின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். எனவே, அவருடன் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, ​​அது எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. சிலம்பரசன் அவர்கள்தான் இந்தப் படத்தை இயக்க என்னிடம் கேட்டார். தற்போது அவர் நடித்து வரும் அரசன் படம் மிகச் சிறப்பாக உருவாகி வருகிறது. அரசன் படத்தின் படப்பிடிப்பு முடியும் அதே காலகட்டத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் நான் இயக்கும் தர்மன் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும்.

எனவே, தர்மன் படத்திற்குப் பிறகு நான் இயக்கும் அடுத்த படம் சிலம்பரசன்  அவர்களுடன்தான் இருக்கும். இதற்கான கதைப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. இது ஒரு மிகச் சிறந்த படமாக அமையும். எஸ்டிஆர் 51 படத்திற்கான பாடல்களுக்கான பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இதில் சில விஷயங்களை இப்போதே என்னால் வெளிப்படுத்த முடியாது. ஒருவேளை நீங்கள் எஸ்டிஆர் அவர்களை ஏதேனும் விருது வழங்கும் விழாவிற்கு அழைத்தால், அவரே இந்தப் படம் குறித்த அனைத்து விவரங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வார்.

இந்தப் படம் மன்மதன் காலக்கட்டத்தில் வெளியான படங்களைப் போன்ற பாணியில் இருக்கும். மன்மதன் காலகட்டத்தில் நான் இயக்கிய படங்களின் பாணியிலேயே எஸ்டிஆர் 51 அமையும். இது ஒரு ஃபேண்டஸி பாணி படமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ரவி மோகனின் அடுத்தப் படத்தை இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஐ நோபடினு வச்சதுக்கு பதிலா ட்விஸ்ட்னு வச்சு இருக்கலாம்… ஓடிடி விமர்சனம் இதோ

Follow Us