AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Yash: இது உங்களுக்கான ஒரு விருந்து.. டாக்ஸிக் திரைப்படம் பற்றி பகிர்ந்த யாஷ்!

Yash Speech: பான் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷ். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் பான் இந்திய திரைப்படம்தான் டாக்ஸிக். சமீபத்தில் டாக்ஸிக் பட தமிழ் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷ், அதில் டாக்ஸிக் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

Yash: இது உங்களுக்கான ஒரு விருந்து.. டாக்ஸிக் திரைப்படம் பற்றி பகிர்ந்த யாஷ்!
யாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Aug 2026 18:17 PM IST

கன்னட சினிமாவின் மூலம் நாயகனாக நுழைந்து, தற்போது பான் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் நாயகன்தான் யாஷ் (Yash). இவரின் நடிப்பில், உலகளாவிய மொழிகளில் உருவாகியுள்ள படம்தான் டாக்ஸிக் (Toxic). இதை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, ஜன நாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா மற்றும் யாஷின் மாஸ்டர் மைண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யாஷ் முன்னணி நட்சத்திர நாயகனாக மொத்தம் 2 வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இதில் அவருடன் நடிகை கியாரா அத்வானி (Kiara Adhvani), நயன்தாரா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தின் வெளியீட்டு முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. நேற்று (24/08/2026) சென்னையில் டாக்ஸிக் படத்தின் தமிழ் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் இப்படத்தின் நட்சத்திர பிரபலங்கள் பலரும் மேடையில் பேசியிருந்தார். அவர்களை தொடர்ந்து மேடையில் பேசிய யாஷ், டாக்ஸிக் திரைப்படத்தின் கதைக்களம் பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் டேர் டெவில் படத்திலிருந்து விலகிய ஸ்ரீலீலா? வைரலாகும் தகவல்

டாக்ஸிக் திரைப்படம் குறித்து மேடையில் நடிகர் யாஷ் தெரிவித்த விஷயம்:

அந்த மேடையில் நடிகர் யாஷ் பேசுகையில், “இந்தப் படம் பேரார்வத்தைப் பற்றியது, இந்தப் படம் உணர்ச்சிகளைப் பற்றியது, இந்தப் படம் உண்மையான மனித இயல்புகளைப் பற்றியது. தமிழக மக்கள் சோதனைகளையும் தனித்துவமான முயற்சிகளையும் ஆதரிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது உங்களுக்கான ஒரு விருந்து. KGF படத்திற்காக நீங்கள் என்னை ஆசீர்வதித்தீர்கள்,

இதையும் படிங்க: உலகம் முழுவதும் பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தை தமிழில் வெளியிடும் படக்குழு – வைரலாகும் பதிவு

நீங்கள் அனைவரும் டாக்ஸிக் படத்தை ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் இயக்குநருக்கு நன்றி, நீங்கள் என்ன உருவாக்கியுள்ளீர்கள், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மக்கள் காண்பார்கள். தியேட்டரில் பாக்கலாம்” என அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.

டாக்ஸிக் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

யாஷின் இந்த டாக்ஸிக் திரைப்படத்திற்கு சென்சார் குழு ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளதாம். மேலும் இப்படமானது 3 மணி நேரத்திற்கு மேல் ரன்னிங் டைம் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டு ஜூலை 26ம் தேதியில் இந்த திரைப்படம் வெளியாக காத்திருக்கும் நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us