AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yash: கர்ப்பமான பிறகும் 100 சதவீத உழைப்பை கொடுத்தார்.. கியாரா அத்வானியை பாராட்டிய யாஷ்!

Yash Praises Kiara Advani: பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கியாரா அத்வானி. இவர் கன்னட சினிமாவில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தில் லீட் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் தான் கர்ப்பமாக இருக்கும்போதும் நடித்திருந்த நிலையில், அவரை பாராட்டி யாஷ் பேசியுள்ளார்.

Yash: கர்ப்பமான பிறகும் 100 சதவீத உழைப்பை கொடுத்தார்.. கியாரா அத்வானியை பாராட்டிய யாஷ்!
கியாரா அத்வானியைப் பாராட்டிய யாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Aug 2026 17:15 PM IST

கன்னட சினிமாவின் மூலமாக நாயகனாக நுழைந்து, தற்போது பான் இந்திய சினிமாவே கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் இறுதியாக கேஜிஎஃப் 2 (KGF 2) படமானது வெளியானது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic). இந்த படத்தில் யாஷ் ரெட்டை வேடத்தில் நடிக்க, அவருடன் நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி (Kiara Advani) , தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதையில் உருவாகியுள்ளது. இப்படமானது ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் மோதல்கள் குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ட்ரெய்லர் சில நாட்களுக்கும் முன் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் பாலிவுட் ப்ரோமோஷன் நடைபெற்றிருந்தது. அதில் பேசிய யாஷ், டாக்ஸிக் படத்திற்காக கியாரா அத்வானி கொடுத்த அர்ப்பணிப்பு குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தனது இசையில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி படங்கள் – அனிருத் பகிர்ந்த விஷயம்!

கியாரா அத்வானியின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய ராகிங் ஸ்டார் யாஷ்:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய யாஷ், “அர்ப்பணிப்பின் மீதான கியாராவின் நேர்மையை யாஷ் பாராட்டினார். அவர் கர்ப்பமாக இருந்தபோதும், படப்பிடிப்பைத் தொடர்ந்தார். யாஷ் மேலும் கூறுகையில், “நான் சொல்லியே ஆக வேண்டும்,கியாரா அத்வானி கர்ப்பமான பிறகும் கூட, தனது 100% அர்ப்பணிப்பைக் கொடுத்தார். அவர் அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் இருந்தார்.

இதையும் படிங்க: இன்னுமா என்ன தெரியல.. ஓராண்டை கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி… படக்குழு வெளியிட்ட பதிவு!

நான் மிகவும் கவலைப்பட்டேன். கீதுவும் (இயக்குநர்) கவலைப்பட்டார். நாங்கள் அவருக்கு பவுன்சர்கள் மற்றும் பாதுகாவலர்கள் போல இருந்தோம். நாங்கள் அவரைக் கவனித்துக் கொண்டோம். ஆனால் உண்மையில், அவர் தனது சிறந்ததைக் கொடுத்தார். நன்றி, கியாரா, இது ஒரு சிறப்பானது” என அதில் அவர் பாராட்டியுள்ளார்.

கியாரா அத்வானி குறித்து யாஷ் பாராட்டி பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

யாஷின் டாக்ஸிக் திரைப்படமானது சிறப்பான ஆக்ஷன் மற்றும் வன்முறை காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சென்சார் குழு “ஏ” தரச் சான்றிதழை வழங்கியுள்ளதாம். அதனால் 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதனால் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us