Toxic: என்னப்பா ரெடியா?.. யாஷின் அதிரடி கேங்ஸ்டர் படமான ‘டாக்ஸிக்’ புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Toxic Movie New Release Date: ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் காத்திருந்த பிரம்மாண்ட கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்தான் டாக்ஸிக். கன்னட சினிமாவின் நாயகன் யாஷ் நடித்திருக்கும் இப்படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகியுள்ளது. இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் கன்னட நடிகர் யாஷ் (Yash). கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கேஜிஎஃப் (KGF) என்ற படத்தின் மூலம் இவருக்கு இந்திய மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்திருந்த நிலையில், இதையடுத்து கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்தாததாக இவருக்கு இந்திய அளவிலான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியது. இந்த படங்களின் வரிசையில் இவர் நடித்துள்ள புதிய பிரியாட்டிக் கேங்ஸ்டர் திரைப்படம்தான் டாக்ஸிக் : எ ஃபைரி டைல் ஃபார் கிரௌன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown Ups). இப்படத்தை மலையாள பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படத்தை கேவிஎன் ப்ரோடகஷன்ஸ் நிறுவனம் மற்றும் யாஷின் மாஸ்டர் மைண்ட் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ 800 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், பிரம்மாண்டமாக தயாராகிளியுள்ளது.
இப்படம் ஆரம்பத்தில், 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின் படத்தின் பின்னணி பணிகள் நிறைவடையாததன் காரணத்தால், ரிலீஸ் தேதி ஜூன் மாதம் இருக்கும் என கூறப்பட்டது அப்போது இறுதிக்கட்ட பணி நிறைவடையாத நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: ஆணுக்கு பெண் வாழ்க்கை கொடுத்தால் தவறா? நூறு சாமி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் – அப்படி என்ன இருக்கு!
யாஷின் டாக்ஸிக் படத்தின் புது ரிலீஸ் தேதி:
இப்படமானது மகன் மற்றும் தந்தைக்கு நடுவே இருக்கும் அதிரடி சண்டைகள் மற்றும் அதற்கான காரணங்களை பற்றிய, 1960-களில் கோவாவில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யாஷ் ரயா மற்றும் டிக்கெட் என இரு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வந்தது SMS காம்போ.. ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் வெளியானது!
யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Honour Thy Father…#Toxic In Cinemas Worldwide from 26-08-2026#ToxicTheMovie#ToxicOn26thAug@TheNameIsYash#Nayanthara @advani_kiara #TaraSutaria @humasqureshi @rukminitweets #GeetuMohandas @VishalMMishra #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere #SandeepSadashiva… pic.twitter.com/a3EH4ic4zo
— TOXIC (@Toxic_themovie) June 21, 2026
யாஷின் டாக்ஸிக் படத்தில் வருடன் நடிகர்கள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, டோவினோ தாமஸ், தாரா சுதாரியா மற்றும் பல்வேறு நட்சத்திர பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதையில் உருவாகியுள்ள நிலையில், இது ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் பிரம்மாண்ட வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.