Toxic: இயக்குநர் கீது மோகன் தாஸின் பர்த்டே.. ஸ்பெஷல் BTS வீடியோவை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு!
Geetu Mohandas Birthday Special Video: 2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம்தான் டாக்ஸிக். யாஷின் நடிப்பில் இப்படம் சிறப்பாக தயாராகியுள்ளது. இப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ் இன்று (08/06/2026) தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இதை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமா மக்கள் மத்தியில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் டாக்ஸிக்: தி ஃபேரி டைல் ஃபார் கிரௌன்-அப்ஸ் (Toxic: The Fairy Tale for Grown-Ups). இந்த படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் யாஷ் ஆக்ஷன் நாயகனாக ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிகைகள் நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி (Kiara Advani), ஹுமா குரேஷி (Huma Qureshi), ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth), தாரா சுக்தாரி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 800 கோடி பட்ஜெட்டில் இப்படமானது தயாராகியுள்ளது. இந்நிலையில் இன்று 2026 ஜூன் 08ம் தேதியில் தனது 45வது பிறந்தநாளை இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக, டாக்ஸிக் படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் யாஷ், மற்றும் இதர படக்குழுவினர் அனைவரும் இருக்கின்றனர். இப்படமானது இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில், படத்திலிருந்து ஒரு சிறு அப்டேட் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: ஜஸ்ட் காட் திங்க்ஸ்… ஓடிடியில் சூப்பர் ஹிட் அடிக்க வரும் கருப்பு – எங்கு எபோது பார்க்கலாம்
கீது மோகன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட பிடிஎஸ் வீடியோ பதிவு:
Behind every shot that hit different, every silence that said more than dialogue ever could, there she was!❤️🔥
Happy birthday, Geetu Mohandas ✨️#Toxic#ToxicTheMovie@TheNameIsYash#Nayanthara @advani_kiara@humasqureshi @rukminitweets #TaraSutaria #GeetuMohandas… pic.twitter.com/KSmU4fwR5C— KVN Productions (@KvnProductions) June 8, 2026
இயக்குநர் கீது மோகன்தாஸ் பிரபல மலையாள இயக்குநராவார். இவர் மலையாளத்தில் ஆரம்பகட்டத்தில் கதாநாயகியாக படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 2014ம் ஆண்டில் “லியர்ஸ் டீஸ்” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில், நிவின் பாலி நடித்திருந்த மூத்தோன் என்ற படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதையடுத்து இவர் 3-வது இயக்கியுள்ள படம்தான் டாக்ஸிக். இதில் நடிகர் யாஷ் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்று மாலை விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்
டாக்ஸிக் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
நடிகர் யாஷ் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த படம்தான் டாக்ஸிக். இப்படத்தில் பல்வேறு நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கும் நிலையில், படத்தின் பின்னணி இசைக்கு குறையே இருக்காது. அந்த வகையில் 2026 ஜூன் 4ம் தேதியில் இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. அதன் காரணமாக 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.