சிலம்பரசனியின் STR51 படம் நடக்குமா? – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொன்ன பகீர் விஷயம்!
STR51 Shooting Status: நடிகர் சிலம்பரசன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படம் STR51. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் கீழ் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கவுள்ள நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் STR51 படம் நடக்குமா? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கோலிவுட் மக்களின் மனத்தில் தனது சிறுவயதிலிருந்து நீங்காத இடத்தை பிடித்திருந்தவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்துவருகிறார். இந்த இடமானது தனுஷின் (Dhanush) வட சென்னை (Vada Chennai) படத்தின் பின்னணி கதியில் தயாராகிவருகிறது. இப்படத்தை முடித்தவுடன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 படத்தில் சிலம்பரசன் இணைவதாக கூறப்பட்டது. இதை ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி (Archana Kalpathi) தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர்173 படத்தை இயக்கவுள்ளதாக பேசப்பட்டுவரும் நிலையில், சிலம்பரசனின் STR51 படத்தின் நிலை என்ன என்பது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பென்ஸ் பட ஷூட்டிங்கை எப்போது முடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.. அவரே கொடுத்த அப்டேட் இதோ!
சிலம்பரசனின் STR51 படத்தின் நிலை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசிய விஷயம்:
அந்த பேட்டியில் பேசியிருந்த அர்ச்சனா கல்பாத்தி, “STR51 படம் ஷூட்டிங் குறித்து என்னால் அப்டேட் கொடுக்க முடியாது. இப்படத்திற்காக நாங்கள் ரெடி, சிலம்பரசன் சார் ரெடி. அஸ்வத் மாரிமுத்துவின் ஸ்கிரிப்ட்-வும் ரெடியாகிவிட்டது. ஆனால் படத்தின் ஷூட்டிங்கில் சில மாற்றங்கள் இருக்கும். படம் நிச்சயமாக உருவாகும்.
இதையும் படிங்க: தனுஷின் மருமகனுடன் இணைந்து நடிக்கும் குஷ்புவின் மகள்.. வைரலாகும் புரோமோ வீடியோ!
எனக்கு தெரிந்து, STR51 படத்தின் ஷூட்டிங் 2027ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என நினைக்கிறேன். அஸ்வத் மாரிமுத்து ஒப்பந்தமான படங்கள் மற்றும் சிம்மபாரசன் ஒப்பந்தமான படங்களை முடித்ததும் நிச்சயம் இப்படம் உருவாகும். எல்லாமே ரெடியாகத்தான் இருக்கிறது. அவர்கள் இருவரும் எப்போது ஓகே சொல்கிறார்களோ, அடுத்த மாதமே STR51 படத்தின் ஷூட்டிங் தொடங்கும்” என அதில் அவர் கூறியுள்ளார்.
STR51 படத்தின் ஷூட்டிங் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியது தொடர்பான பதிவு:
#STR51 – #ArchanaKalpathi in a Recent Interview ⭐
“AGS is ready.. STR is also ready.. Ashwath’s script is also done.. But there might be some changes in the order of films.. The film is definitely being made.. We are hoping to start by next year February.. It depends on when… pic.twitter.com/5da2BEAFmJ
— Laxmi Kanth (@iammoviebuff007) June 7, 2026
சிலம்பரசன் அரசன் படத்தில் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். மேலும் அஸ்வத் மாரிமுத்துவும் தலைவர் 173 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடவில்லை. ரஜினிகாந்திற்கு அஸ்வத் மாரிமுத்துவின் கதை பிடித்திருந்தால் மட்டுமே, இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.