தனுஷின் மருமகனுடன் இணைந்து நடிக்கும் குஷ்புவின் மகள்.. வைரலாகும் புரோமோ வீடியோ!
Attacker Movie Promo: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பவிஷ் நாராயண். இவர் தற்போது ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் குஷ்புவின் மகள் அவந்திகா நடிக்கிறார். இப்படத்திற்கு அட்டாகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், புரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மிகவும் பிரபலமானவர் தனுஷ் (Dhanush). இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த படம்தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK). இப்படமானது இளம் தலைமுறையினரின் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் பவிஷ் நாராயண் (Pavish Narayan). இவர் தனுஷின் சகோதரியின் மகன் ஆவார். இவர் இப்படத்தை அடுத்து, “லீவ் ஓ லவ்” (Love Oh Love) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இவர் நடிக்கும் 3வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிரடி ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக தயாராகிவரும் இப்படத்தில் பவிஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை குஷ்பு (Kushbhu) மற்றும் சுந்தர் சி-யின் (SUndar C) 2வது மகள் அவந்திகாவும் (Avantika) முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
இது அவந்திகா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் என்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது. இந்த படத்திற்கு படக்குழு “அட்டாக்கர்” என டைட்டில் வைத்துள்ள நிலையில், இதன் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மகன் பிறந்த நாள்… சேயோன் படக்குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்
பவிஷ் மற்றும் அவந்திகாவின் அட்டாக்கர் படத்தின் அறிவிப்பு புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
A new story. A new journey. A new milestone.
Zinema Media and Entertainment Limited Dinesh Raj proudly presents #ProductionNo3 #Pavish3 titled #Attacker.
Tamil Cinema’s first volleyball-based feature film.
Meet the Players of Attacker 🏐 Video Out Now pic.twitter.com/MHOSeZlM0E
— Zinema Media (@zinemaindia) June 6, 2026
பவிஷ் மற்றும் அவந்திகாவின் அட்டாக்கர் படம்:
இந்த அட்டாக்கர் படத்தை இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் இயக்க, சினிமா மீடியா என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படத்தில் பவிஷ் நாயகனாக நடிக்க அவருடன் அவந்திகா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படமானது ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக தயாராகிவருகிறது. இந்தப்படம் வாலிபால் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். தமிழ் சினிமாவிலே வாலிபால் விளையாட்டை மையமாக கொண்டு இயக்கப்படும் முதல் படமாக இந்த அட்டாக்கர் படம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அருள் நிதியை இயக்கும் இயக்குநர் வசந்தபாலன் – வைரலாகும் தகவல்
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சிறப்பாக தொடங்கியுள்ளது. இதில் பவிஷிற்கு ஜோடியாக அவந்திகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பவிஷ் “வீரன்” என்ற வேடத்திலும் அவந்திகா “பிரிடா” என்ற வேடத்திலும் நடிக்கவுள்ளார்களாம். தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது. இப்படத்தின் மூலம் குஷ்புவின் மகளும் நாயகியாக அறிமுகமாகும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்தைத் தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.