Pooja Hegde: எனக்கு என்னிடம் அந்த விஷயம் ரொம்பவே பிடிக்கும்.. அதுவே எனது பலம் – பூஜா ஹெக்டே!
Pooja Hegde Reveals Her Favorite Trait: பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர், இந்தி சினிமாவில் தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், அவருக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விஷயம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் கூலி (Coolie) படத்தில் மோனிகா (Monika) என்ற பாடலில் நடனமாடி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் மிகுந்த பிரபலத்தை பெற்றவர். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). கடந்த 2025ம் ஆண்டில் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியாகிய இப்படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதையடுத்து இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படமான ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இன்னும் இப்படமானது திரையரங்குகளில் வெளியாகவில்லை. சென்சார் பிரச்னை இப்படத்திற்கு இன்னும் கிடைக்காத நிலையில், படம் எப்போது வெளியாகும் என உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து வருண் தவானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள “ஹை ஜனனி தோ இஷ்க் ஹோன ஹை” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படமானது கடந்த 2026 ஜூன் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பேசியிருந்த பூஜா ஹெக்டே, தன்னிடத்தில் தனக்கு பிடித்தமான விஷயம் பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஜூன் மாதம் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படும் ஜன நாயன் படம் – தொடரும் சென்சார் சிக்கல்!
தன்னிடத்தில் தனக்கு பிடித்த விஷயம் என்ன என்பது குறித்து பேசிய பூஜா ஹெக்டே:
அந்த பேட்டியில் பூஜா ஹெக்டே பேசுகையில், “என்னை பற்றி ஒவ்வொருவருக்கும், ஒவ்விரு புரிதல் இருக்கும். எனது குணாதியசயங்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப மாறுபடும். சிலருக்கு எனது நடிப்பு பிடிக்கும், சிலருக்கு எனது நடனம் பிடிக்கும். ஆனால் எனக்கு என்னிடத்தில் மிகவும் பிடித்த விஷயம் சிரிப்பு தான். எந்த சூழலிலும் சோகத்தை, வலியை மற்றும் வேதனையை காட்டாத என் சிரிப்புதான் என் பலம். இதுவே எனது அடையாளம்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பெத்தி படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனம் – இயக்குநர் விளக்கம்
நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜன நாயகன் திரைப்படத்திற்கு பிறகு, ராகவா லாரன்ஸ் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிவரும் காஞ்சனா 4 படத்தில் நாயகியாக நடித்துவருகிறாராம். இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் DQ 41 என்ற படத்தில் நடித்துவருகிறார். காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டவரும் இப்படத்தின் முதற்கட்ட ஷட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.