Peddi: ராம் சரணின் மாஸ் ஆக்ஷன்.. பெத்தி படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Peddi Movie 2nd Day Collection: டோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் பெத்தி. இப்படமானது வெளியாகி 2 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் ஈர்க்கப்படும் நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு படம் என்ற விதத்தில், படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் பெத்தி (Peddi). இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இது ஜான்வி கபூருக்கு இரண்டாவது தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu sana) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் ராம் சரண், ரங்கஸ்தலம் (Rangasthalam) என்ற படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெத்தி படத்தின் மூலமாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்தது. இப்படமானது கடந்த 2026 ஜூன் 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியது. இந்நிலையில் இன்றுடன் (06/06/2026) இப்படம் வெளியாகி இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லகேம் குடும்பா யூனிட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
பெத்தி படத்தின் இரண்டாவது நாள் வசூல் என்ன:
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் இணைந்து நடித்துள்ள படம்தான் பெத்தி. இப்படமானது விளையாட்டு சம்பந்தமான அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது வெளியான முதல் நாளில் சுமார் ரூ 131 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.
இதையும் படிங்க: அரசன் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ
இதனை தொடர்ந்து 2வது நாளில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. இப்படமானது இரண்டாவது நாளில் சுமார் ரூ 181.8 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருவதாக கூறப்படுகிறது.
பெத்தி படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
#Peddi collects 181.8 CR+ GROSS WW in 2 Days💥💥
BOX OFFICE CHAMPION #PEDDI is conquering the cinemas ❤🔥
Book your tickets now 💥https://t.co/xclVAMz8oI pic.twitter.com/OzeSuOntM0
— Mythri Movie Makers (@MythriOfficial) June 6, 2026
பெத்தி திரைப்படத்தின் மீது தற்போது சில புகார்கள் எழுந்துவருகிறது. இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்த ஆச்சியம்மா கதாபாத்திரம் முழுக்க கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படத்தில் ஜான்வி கபூர் காட்டப்பட்டுள்ளார் என மக்கள் விமர்சங்களை எழுப்பிவருகின்றனர். இதன் காரணமாக இப்படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவுள்ளதாகவும் இயக்குநர் பூச்சி பாபு சனா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.