Nivin Pauly: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லகேம் குடும்பா யூனிட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Bethlehem Kudumba Unit Movie First Look: மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்துவருபவர்கள் நிவின்பாலி மற்றும் மமிதா பைஜூ. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம்தான் பெத்லகேம் குடும்பா யூனிட். தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் இளம் கதாநாயகியாக பிரபலமானவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து, தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு பின் மலையாளம் சினிமாவில் (Malayalam Cinema) நடித்துள்ள புதிய திரைப்படம்தான் “பெத்லகேம் குடும்பா யூனிட்” (Bethlehem Kudumba Unit). இப்படத்தில் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி (Nivin Pauly) நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாகவே மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த இருவரின் ஜோடியானது இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது. இப்படமானது பேமிலி எண்டர்டைமென்ட் மற்றும் பீல் குட் காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதன் ஷூட்டிங் கடந்த 2026 மே மாதத்தில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
பெத்லகேம் குடும்பா யூனிட் படமானது 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் இன்று 2026 ஜூன் 5ம் தேதியில் இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் நிவின்பாலி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிறப்பாக இருக்கும் இந்த ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் புதிய படம்.. வெளியானது ‘பாலன் தி பாய்’ ட்ரெய்லர் வெளியீடு!
நடிகர் நிவின்பாலி வெளியிட்ட பெத்லகேம் குடும்பா யூனிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:
Love. Laughter. Onam.🌸
That’s the plan !!Presenting the First Look Poster of Bethlehem Kudumba Unit.
Directed by Girish AD#GirishAD #MamithaBaiju #BKU #BethlehemKudumbaUnit pic.twitter.com/mArMxbSuFj
— Nivin Pauly (@NivinOfficial) June 5, 2026
நிவின்பாலி மற்றும் மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் படத்தை, பிரேமலு படத்தி இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கியுள்ளார். இவர் பிரேமலு 2 படம் இயக்குவதாக கூறியிருந்த நிலையில், அந்த படத்திற்கான கதையில் சில குழப்பங்கள் இருந்த நிலையில், நிவின் பாலியை வைத்து பெத்லகேம் குடும்பா யூனிட் இயக்குவதாக கூறியிருந்தார். இந்த பெத்லகேம் குடும்பா யூனிட் படமானது பீல் கு காதல் கதை கொண்ட படமாக தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: பேட்ரியாட் முதல் துரந்தர் 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ
இப்படத்தில் நடிகர்கள் சங்கீத் பிரதீப், ஷயம் மோகன், வினய், சுரேஷ் கண்ணா, ஸ்ரீண்டா மற்றும் பிந்து போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துவரும் நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.