Balan Movie: மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் புதிய படம்.. வெளியானது ‘பாலன் தி பாய்’ ட்ரெய்லர் வெளியீடு!
Balan: The Boy Movie Trailer: மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமான இயக்குனர் சிதம்பரம். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் பாலன் தி பாய். இப்படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாளம் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமான இயக்குநர்தான் சிதம்பரம் (Chidambaram). இவரின் இயக்கத்தில் மலையாளத்தில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், தனது இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் (Manjummel Boys) என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. கொடைக்கானலில் குணா குகையில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களிடையே, குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் பாலன் : தி பாய் (Balan : The Boy).
இப்படமானது அதிரடி திரில்லர் மற்றும் கிரைம் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2026 ஜூன் 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 ஜூன் 05ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க:
பாலன் தி பாய் படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Today, the world of Balan-The Boy opens its doors.
But aren’t some paths better left undiscovered?Official Trailer Out Now on @zeemusicsouth YouTube Channel
Balan – The Boy in Cinemas June 19, 2026#BalanTheBoy
Malyalam – https://t.co/a39hHlZc6V
Hindi -… pic.twitter.com/oukaOjuFwq
— KVN Productions (@KvnProductions) June 5, 2026
பாலன் தி பாய் படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு :
இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது, படம் ஒரு கிரைம் திரில்லர் மற்றும் சுவாரஸ்ய திருப்பங்கள் கொண்ட படமாக தெரிகிறது. இப்படத்தில் ஒரு தாய் மற்றும் மகன் இருவரும் தங்களின் அடையாளத்தை மாற்றிக்கொண்டே பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அதிலும், அந்த சிறுவனின் தாய் மனநல பாதிக்கப்பட்டவரை போல தெரிகிறது. அவர், மேலும் சில கொலைகளை செய்கிறார். அவற்றை எதற்காக செய்கிறார், அந்த சிறுவனின் நிலை என்ன ன்பது குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இந்த பட ட்ரெய்லரில் நடிகர் டோவினோ தாமஸும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது திரையரங்குகளில் நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சந்தானத்தின் லவ் பைட் படம் குறித்து பேசிய தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி
இந்த பாலன் படத்தை, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சந்து சலீம்குமார், அர்ஜுன் அசோகன், டோவினோ தாமஸ், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் கிரிஷ் ஏ டி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.