Director Sasi: நூறு சாமி படம் நிஜ வாழ்க்கையை மையமாக கொண்ட கதை – இயக்குநர் சசி பேச்சு!
Director Sasi About Nooru Saami Story: இயக்குநர் சசி விஜய் ஆண்டனியின் பிரச்சைக்காரன் என்ற படத்தை இயக்கியதன் மூலமாக பிரபலமானவர். இவரின் இயக்கத்தில் நூறு சாமி என்ற புது படமானது தயாராகியுள்ள நிலையில், இப்படம் உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படம் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் சசி (Director Sasi) இயக்கத்தில் தமிழில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் தமிழில் பிச்சைக்காரன் (Pichaikkaran) மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை (Sivappu Manjal Pachai) போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களின் வரிசையில் இவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தில் விஜய் ஆண்டனி (Vijay Antony), ஸ்வாசிகா (Swasika), லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், காவ்யா அனில் மற்றும் கருணாஸ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு அம்மாவை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனியை காட்டிலும், நடிகை ஸ்வாசிகாவின் கதாபாத்திரம் அதிகமாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்களும் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து படமும் வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சசி கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், நூறு சாமி படமானது ஒரு உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளர்.




இதையும் படிங்க: சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் ஆர்யா? வைரலாகும் தகவல்
நூறு சாமி திரைப்படத்தின் கதை குறித்த இயக்குநர் சசி பகிர்ந்த விஷயம்:
அந்த நேர்காணலில் இயக்குநர் சசி பேசுகையில், “நூறு சாமி திரைப்படத்தின் கதை ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் ஸ்வாசிகா நடித்திருக்கும் நிஜ நபரை, நான் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்தேன். அந்த நிகழ்ச்சியை பார்த்துகொண்டிக்கும்போதே, எனக்கு மிகுந்த வலியையும், உணர்ச்சியையும் கொடுத்தது.
இதையும் படிங்க: விஜய் சொன்ன வார்த்தை… முக்கிய முடிவு எடுத்த ஜன நாயகன் படக்குழு!
அதன்பிறகு, அந்த பெண்ணை நேரில் சந்தித்தேன். அவர்களின் கிராமத்திற்கு சென்று, பலரையும் பேட்டி எடுத்திருந்தேன். அந்த பெண் நிஜ வாழ்க்கையில் சந்தித்தது. அவர்களின் அனுபவங்களை பற்றி அறிந்துகொண்டேன். அதன் பிறகே இப்படத்தை கதையை எழுதினேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.
நூறு சாமி படம் குறித்து இயக்குநர் சசி கூறியது தொடர்பான பதிவு:
Director #Sasi (Recent):
The story of #Noorusami is based on a real-life incident. I first saw them on a reality show, and while watching that show, I felt a lot of pain and emotion. After that, I met them personally, visited their village, and interviewed many people there.… pic.twitter.com/pAhmRqgWS3
— Movie Tamil (@_MovieTamil) June 5, 2026
இந்த நூறு சாமி படமானது ஒரு கணவனை இழந்த பெண், அவரின் குழந்தைகளை வளர்ப்பதற்கு படும் கஷ்டம், அவர் வாழ்க்கையில் சந்திக்கும் தொடர் சிக்கல்கள் மற்றும் ஒரு பெண்ணின் நிலையை மையமாக கொண்ட ஒருபடமாக அமைந்துள்ளது. இப்படமானது யு/ஏ/ 13+ என்ற சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது. அதன்படி 13 வயதிற்கு ,மேற்பட்ட நபர்கள் இப்படத்தை திரையரங்குகள் என்று பார்க்கலாம். இப்படம் வரும் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.