AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டு நாள் கார்த்திகை நட்சத்திரம்: ஆடி கிருத்திகை விரதம் இருக்க சரியான நாள் எது?

Special Aadi Krittigai Auspicious: ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருநாளாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 மாலை தொடங்கி ஆகஸ்ட் 7 மாலை வரை நீடிப்பதால் விரதம் இருக்கும் நாளில் பக்தர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

இரண்டு நாள் கார்த்திகை நட்சத்திரம்: ஆடி கிருத்திகை விரதம் இருக்க சரியான நாள் எது?
ஆடி கிருத்திகைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 26 Jul 2026 05:26 AM IST

ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த முக்கிய திருநாளாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6 மாலை தொடங்கி ஆகஸ்ட் 7 மாலை வரை நீடிப்பதால் விரதம் இருக்கும் நாளில் பக்தர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. சூரிய உதய கணக்கீட்டின்படி ஆகஸ்ட் 7-ஆம் அன்றே விரதமிருந்து முருகனை வழிபடுவது முழுமையான பலனைத் தரும் என்று ஜோதிடர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். வழக்கமாகச் சந்திரன் மட்டுமே உச்சத்தில் இருக்கும் இந்நாளில், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானும் உச்சம் பெற்று அரிய யோகத்தை உருவாக்குவது கூடுதல் சிறப்பாகும். இத்திருநாளில் மலைக் கோயில்களுக்குச் சென்று முருகனுக்குத் தேனும் தினைமாவும் படைத்து வழிபடுவதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறி எதிரிகளின் தடைகள் விலகும் என்பது நம்பிக்கையாகும்.

ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கும், முன்னோர்கள் நினைவஞ்சலிக்கும் மிகுந்த புனிதம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களில் கூழ் வார்த்தல், தீமிதித்தல் போன்ற பிராத்தனைகள் சிறப்பாக நடைபெறும். இதே மாதத்தில் தமிழ் தெய்வமான முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கிய திருநாளாக “ஆடி கிருத்திகை” போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் போன்று ஆடி கிருத்திகையும் முருக பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கார்த்திகை திருவிழாவாகும்.

ஆடி கிருத்திகை தேதியில் நிலவும் குழப்பம்

முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் பக்தர்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 6:18 மணிக்குத் தொடங்கும் கார்த்திகை நட்சத்திரம், அடுத்த நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 4:51 மணி வரை நீடிக்கிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த நட்சத்திரம் வருவதால், எந்த நாளில் விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதில் பக்தர்களிடையே பெரிய சந்தேகமும் குழப்பமும் எழுந்துள்ளது.

விரதம் இருக்க உகந்த நாள் குறித்து ஜோதிட விளக்கம்

இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சங்கர சுப்ரமணியன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாங்க முறைப்படி சூரிய உதயத்திற்குப் பிறகே விரதங்களையும் ஆன்மீக வழிபாடுகளையும் தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலையில் நட்சத்திரம் தொடங்கினாலும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி சூரிய உதயத்தின் போது கார்த்திகை நட்சத்திரம் வீற்றிருப்பதால், அன்று முழு நாளும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதே சரியான மற்றும் முழுமையான பலனைத் தரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: பிரதோஷ நேரத்தில் வீட்டிலோ கோவிலிலோ எப்படி வழிபட வேண்டும்?

12 ஆண்டுகளுக்குப் பிறகான அரிய யோகமும் வழிபாட்டு முறையும்

மேலும், வழக்கமாக ஆடி கிருத்திகை நாளில் சந்திரன் மட்டுமே உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் மற்றும் குரு பகவான் ஆகிய இருவரும் உச்சத்தில் இருக்கும் அரிய ஜோதிட நிகழ்வு அமைகிறது. இந்த அதிர்ஷ்டமான நாளில் பக்தர்கள் மனமுருகி விரதமிருந்து முருகப்பெருமானுக்குத் தேனும் தினைமாவும் படைத்துத் துதித்தால் வேண்டிய நன்மைகள் உடனே நடக்கும். அதேபோல, இத்திருநாளில் மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வது எதிரிகளின் தடைகளை நீக்கி வாழ்வில் பெருவெற்றியைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.

Follow Us