AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs AFG: டி20யில் இந்திய அணிக்கு அதிவேக சதம்.. வரலாறு படைத்த அபிஷேக் சர்மா!

Abhishek Sharma Century: 30 பந்துகளில் சதம் அடித்த பிறகு, அபிஷேக் சர்மா 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களின் உதவியுடன் 34 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரது ஆட்டத்தில் பறந்த சிக்ஸர் பவுண்டரி மழை ரசிகர்களுக்கு வாணவேடிக்கையாக இருந்தது. அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ஒரு வீடியோ கேம் போல அதிரடியாக இருந்தது.

IND vs AFG: டி20யில் இந்திய அணிக்கு அதிவேக சதம்.. வரலாறு படைத்த அபிஷேக் சர்மா!
அபிஷேக் சர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Sep 2026 21:31 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் (IND vs AFG) அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். இந்த மைல்கல்லை எட்டும்போது அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் 9 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் அடித்தார். இதற்கு முன்பு, இந்தியாவுக்காக அதிவேக டி20 சதம் அடித்த சாதனையை முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) வைத்திருந்தார். இந்த சாதனையை ரோஹித் சர்மா 35 பந்துகளில் 100 ரன்களை எட்டியிருந்தார்.

ஒட்டுமொத்தமாக, டி20 வடிவத்தில் அதிவேக சதம் அடித்த சாதனையை எஸ்டோனிய வீரர் சாஹில் சௌஹான் கொண்டுள்ளார். 2024-ல் சைப்ரஸுக்கு எதிராக சாஹில் தனது சதத்தை 27 பந்துகளில் எட்டினார். இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் துருக்கியின் முகமது ஃபஹத் மவுதூஸ் 29 பந்துகளில் சதம் அடித்தார். இந்த பட்டியலில் அபிஷேக் சர்மா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ALSO READ: வைபவ் சூர்யவன்ஷியுடன் போட்டியா? முதன்முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்

ஃபுல் மெம்பர் அணிக்காக குறைந்த பந்துகளில் சதம்:


ஐசிசி அங்கீகாரம் பெற்ற ஃபுல் மெம்பர் அணிக்காக டி20 சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை அபிஷேக் சர்மா ஏற்கனவே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹில் மற்றும் ஃபஹத்தின் அணிகளுக்கு ஃபுல் மெம்பர் அந்தஸ்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் 108 ரன்கள் எடுத்து அவுட்:

30 பந்துகளில் சதம் அடித்த பிறகு, அபிஷேக் சர்மா 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களின் உதவியுடன் 34 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரது ஆட்டத்தில் பறந்த சிக்ஸர் பவுண்டரி மழை ரசிகர்களுக்கு வாணவேடிக்கையாக இருந்தது. அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ஒரு வீடியோ கேம் போல அதிரடியாக இருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி, பேட்டிங்கில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட போதிலும், அதன்பிறகு அபிஷேக் ஒரு அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஐந்தாவது ஓவரில் தனது அரைசதத்தை எட்டினார். பின்னர், அடுத்த 14 பந்துகளில் தனது சதத்தை எட்டினார்.

ALSO READ: மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சூர்யவன்ஷி.. சாம்சனுக்கு வாய்ப்பு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

பவர்பிளேயில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்

அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்தது, தற்போது டி20 சர்வதேசப் போட்டிகளில் பவர்பிளேயில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக மாறியுள்ளது.

Follow Us