BBL 2026-27: டிசம்பர் 12ல் சென்னையில் தொடங்கும் பிபிஎல்.. தமிழில் பதிவிட்டு வரவேற்ற நிர்வாகம்!
Big Bash League Tamil Post: பிபிஎல் சென்னையில் நடைபெறுவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமனில் முடிந்த டெஸ்ட் போட்டியில் டீன் ஜோன்ஸ் இந்த மைதானத்தில் விளையாடியதை நினைவில் கொள்ளும் அளவுக்கு எனக்கு வயது ஆகிவிட்டது. நமக்குத் தெரிந்தபடி, உலகின் மிகவும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் சென்னையில் உள்ளனர் என்று பிபிஎல் இயக்குனர் ரிக்வி தெரிவித்துள்ளார்.
பிக் பாஷ் லீக் தனது 2026-27 சீசனை (BBL 2026-27) வருகின்ற 2027 டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (M. A. Chidambaram Stadium) (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பிபிஎல் வணிக செயல்பாடுகள் தலைவர் பில் ரிக்பி, “ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுடனும், சென்னைக்கு ஆழமான தொடர்பு உள்ளது. பிபிஎல் சென்னையில் நடைபெறுவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமனில் முடிந்த டெஸ்ட் போட்டியில் டீன் ஜோன்ஸ் இந்த மைதானத்தில் விளையாடியதை நினைவில் கொள்ளும் அளவுக்கு எனக்கு வயது ஆகிவிட்டது. நமக்குத் தெரிந்தபடி, உலகின் மிகவும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் சென்னையில் உள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிஎஸ்கே போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அங்கு நிலவிய சூழல் நம்பமுடியாததாக இருந்தது” என்றார்.
ALSO READ: சென்னையில் முதல்முறை பிக் பாஷ் லீக்.. ஒப்புதல் அளித்த பிசிசிஐ.. எப்போது நடைபெறுகிறது?




தமிழில் பதிவிட்ட பிபிஎல் நிர்வாகம்:
Tamil Language on the BBL Website ahead of the DEC 12 Match in Chennai. pic.twitter.com/rVZxhDLdLl
— CricketGully (@thecricketgully) September 17, 2026
இதுதொடர்பாக பிபிஎல் வெளியிட்ட தமிழ் பதிவில், “உலக தரம் வாய்ந்த வீரர்கள், மின்னல் வேக கிரிக்கெட், ரசிகர்களை கவரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆட்டம் மற்ற்ய்ம் கொண்டாட்டம் மறக்க முடியாத ஒரு கிரிக்கெட் திருவிழா உங்களை எதிர்நோக்கி காத்திருக்கும்.
இது ஒரு சாதாரண டி20 போட்டி அல்ல, ஆஸ்திரேலியாவின் பிரபலமான பிக் பாஷ் அனுபவத்தை நம்ம சென்னைக்கு நேரடியாக காணும் அரிய வாய்ப்பு. கிரிக்கெட்டின் மீது கொண்டுள்ள ஒரே ஆர்வத்தின் மூலம் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இது அமையும்” என்று குறிப்பிட்டிருந்தது.
ALSO READ: சென்னையில் பிபிஎல்.. புது திட்டம் போடும் ஆஸ்திரேலியா.. காரணம் என்ன?
தொடர்ந்து பேசிய ரிக்வி, “இந்தப் போட்டியைச் சாத்தியமாக்குவதற்கு ஆதரவளித்த ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும், ஆஸ்திரேலியா-இந்தியா உறவுகளுக்கான மையத்திற்கும் (CAIR) எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வணிகங்கள் மற்றும் சமூகங்கள் என அனைத்துத் துறைகளிலும் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளைக் கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் கிரிக்கெட் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் பலர் பிக் பாஷ் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.
ஆனால், வருகின்ற 2026 டிசம்பர் 12 அன்று சென்னையில் உள்ள ரசிகர்களுக்கும் சமூகத்தினருக்கும் உண்மையான பிக் பாஷ் அனுபவத்தை நேரடியாகக் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்கிரிக்கெட்டைத் தாண்டி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் வணிக நிறுவனங்களும் ஒன்றிணைந்து, உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இந்தப் போட்டி ஒரு மகத்தான வாய்ப்பை வழங்குகிறது.” என்று தெரிவித்தார்.