AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பஞ்சாப் தொடர்ந்து 6 தோல்வி.. ப்ரீத்தி ஜிந்தா அப்செட்.. வைரலாகும் வீடியோ!

Preity Zinta looked upset: பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், டக்அவுட்டில் வெளிப்படையாகவே வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். அதே சமயம், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவுடன் மைதானத்தில் தீவிரமாக ஆலோசனை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL 2026: பஞ்சாப் தொடர்ந்து 6 தோல்வி.. ப்ரீத்தி ஜிந்தா அப்செட்.. வைரலாகும் வீடியோ!
ப்ரீத்தி ஜிந்தா - ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 May 2026 16:51 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 17ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை (Punjab Kings) வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் மூலம், தொடர்ச்சியாக 6வது தோல்வியைச் சந்தித்ததன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அணி பஞ்சாப் அணியின் டிரெஸ்ஸிங் ரூம் மற்றும் அணி உரிமையாளர்களிடையே ஏற்பட்ட ஏமாற்றம் தெளிவாகத் தெரிந்தது. மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், டக்அவுட்டில் வெளிப்படையாகவே வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். அதே சமயம், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவுடன் மைதானத்தில் தீவிரமாக ஆலோசனை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: இதுவரை ஆர்சிபி மட்டுமே தகுதி.. மீதம் 3க்கு போட்டியிடும் 5 அணிகள்! யாருக்கு வாய்ப்பு?

பஞ்சாப் தோல்விக்கு காரணம் என்ன..?


பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “ பெங்களூரு அணி ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றனர், பின்னர் பவர்பிளே முடிந்த உடனேயே பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தாக்குதலை தொடங்கினர். 222 ரன்களை எட்டியது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடு என்று நான் நினைக்கிறேன். பந்துவீச்சில் எங்களால் அவ்வளவாக விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. பவர்பிளேவிலேயே ஆட்டம் கைவிட்டுப் போனது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்து அசத்தினார், அதே நேரத்தில் விராட் கோலியின் அதிரடியான அரைசதம் பெங்களூரு அணியை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியால் 199/8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ரசிக் சலாம் தார் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மீண்டும் சூரியன் உதிக்கும்..

தொடர்ந்து, தங்களது பேட்டிங் குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், ”நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். மேலும், எங்கள் அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஷ். பவர்பிளேயில் அவர்கள் வழக்கமாக எங்களுக்குக் கொடுக்கும் தொடக்கத்தை, இந்த முறை எங்களால் பெற முடியவில்லை. மேலும் நான் களமிறங்கி சீக்கிரமே ஆட்டமிழந்ததும் ஒரு காரணம். மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ஆனால் ஷஷாங்க், ஸ்டோனிஸ் மற்றும் களத்தில் இருந்த வேறு சிலரின் ஆட்டமும் பாராட்டத்தக்கது. முடிவுகளைப் பொருட்படுத்தாமல் நான் அடுத்த போட்டியில் என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமிடுவது முக்கியம். இது முடிந்துவிட்டது, இது அகன்றுவிட்டது. நாளை மீண்டும் நான் சூரிய உதயத்தைக் காணப் போகிறேன், மேலும் சுரங்கப்பாதையின் முடிவில் எப்போதும் ஒரு ஒளி இருக்கும்,” என்று கூறினார்.

ALSO READ: பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

பஞ்சாப் அணி போட்டியில் தோற்றபோதிலும், ஷஷாங்க் சிங்கும் மார்கஸ் ஸ்டோனிஸும் பெங்களூரு அணிக்கு எதிராக கடைசிவரை போராடினர். ஷஷாங்க் வெறும் 27 பந்துகளில் அதிரடியாக 56 ரன்களும், ஸ்டோனிஸ் 25 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் போதுமானதாக இல்லாததால், பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியில் முடிந்தது.

Follow Us