MS Dhoni: என்.எஸ்.ஜி கமாண்டோ பயிற்சி மையத்தில் தோனி.. துப்பாக்கியுடன் கடும் பயிற்சி..!
MS Dhoni Visited NSG Regional Centre: மகேந்திர சிங் தோனி பிராந்திய இராணுவத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். அதில், பாராசூட் படைப்பிரிவின் 106வது பாரா பிராந்திய இராணுவப் பட்டாலியனில் அங்கம் வகிக்கிறார். முன்னதாக, தோனி காஷ்மீரில் இந்திய ராணுவத்துடன் 2 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டார். பின்னர், தோனி தனது காலணிகளை தானே சுத்தம் செய்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் முன்னாள் கேப்டன் 44 வயதான எம்.எஸ். தோனி சென்னையில் உள்ள என்.எஸ்.ஜி மண்டல மையத்தைப் பார்வையிட்டார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கு மத்தியில், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) நேற்று அதாவது 2026 மே 17ம் தேதி சென்னையில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை (NSG) மண்டல மையத்திற்குச் சென்றார். அங்கு எம்.எஸ்.தோனி கமாண்டோ வீரர்களுடன் ஒரு சப்-மெஷின் துப்பாக்கியால் சுட்டதுடன், கைத்துப்பாக்கியாலும் குறிவைத்தும் பயிற்சி மேற்கொண்டார். தோனி, கமாண்டோக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டதுடன், அவர்களுடன் மதிய உணவும் உண்டார். தற்போது இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: கடைசி போட்டியில் கால் வைக்கும் எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் ஓய்வு..?




தோனி உடற்தகுதி உள்ளதா..?
Lt. Col. MS Dhoni visited the NSG regional hub in Chennai. pic.twitter.com/jLA9AzaYGH
— Defence News Of INDIA (@DefenceNewsOfIN) May 17, 2026
பயிற்சி மேற்கொண்ட எம்.எஸ்.தோனியிடம் ஒரு சில ராணுவ வீரர்கள் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தோனி கமாண்டோக்களிடம், ”நான் திடகாத்திரமாகத் தெரிகிறேன், இல்லையா?” என்று கேட்டார். வீரர்கள் ஆமாம் என்று பதிலளித்தனர். “நான் கடந்த முறை வந்தபோது இருந்ததை விட இப்போது இன்னும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன். என்னை போல் காலம் செல்லச் செல்ல, நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” என்ற அறிவுரையையும் வழங்கினார். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு எம்.எஸ். தோனி என்.எஸ்.ஜி முகாமில் இணைந்து, பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் முக்கிய பதவி:
மகேந்திர சிங் தோனி பிராந்திய இராணுவத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். அதில், பாராசூட் படைப்பிரிவின் 106வது பாரா பிராந்திய இராணுவப் பட்டாலியனில் அங்கம் வகிக்கிறார். முன்னதாக, தோனி காஷ்மீரில் இந்திய ராணுவத்துடன் 2 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டார். பின்னர், தோனி தனது காலணிகளை தானே சுத்தம் செய்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. முழங்கால் காயம் காரணமாக தோனி, நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சென்னை அணி சொந்த சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 மே 18ம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. மேலும் அதில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: தோனி சொன்ன அந்த நாள் இன்றா? ஓய்வை அறிவிக்கும் தல? புள்ளிகளை இணைக்கும் ரசிகர்கள்!
இருப்பினும், தோனியிடமிருந்தோ அல்லது சென்னை நிர்வாகத்திடமிருந்தோ இதுவரை அப்படிப்பட்ட எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதே அவர் விளையாடுவதில் தாமதம் ஏற்பட்டதற்குக் காரணம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.