AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கடைசி போட்டியில் கால் வைக்கும் எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் ஓய்வு..?

MS Dhoni IPL Retirement: எம்.எஸ். தோனி தனது கேப்டன்சியால் ஐபிஎல்-லில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவரது கேப்டன்சியின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமின்றி, தொடர்ச்சியாக சிறப்பாகவும் செயல்பட்டது. தோனி தனது கேப்டன்சியில் மட்டுமல்ல, தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

IPL 2026: கடைசி போட்டியில் கால் வைக்கும் எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் ஓய்வு..?
எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 May 2026 19:22 PM IST

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவரான எம்.எஸ். தோனி (MS Dhoni) பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிடைத்த தகவல்களின்படி, தோனி விரைவில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கக்கூடும் என்றும், அவரது கடைசிப் போட்டி சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இதே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்தான் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு பல மறக்க முடியாத வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். இதையடுத்து, சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனிக்கு ஒரு சிறப்பு பிரியாவிடை அளிக்கத் தயாராகி வருவதாக நம்பப்படுகிறது.

ALSO READ: பிளே ஆஃப் செல்ல ஒரே ஒரு வாய்ப்பு.. பயன்படுத்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்..?

கடைசி போட்டியில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா..?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் மிகவும் வெற்றிகரமான கேப்டனுக்கு ஒரு பிரம்மாண்டமான பிரியாவிடை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், தோனி தனது கடைசி ஐபிஎல் போட்டியை சேப்பாக்கில் விளையாடக்கூடும். இந்த சென்னை மைதானம் எம்.எஸ். தோனியின் இதயத்திற்கு எப்போதுமே மிகவும் நெருக்கமானது. இங்குதான் அவர் பலமுறை கடினமான சூழ்நிலைகளில் தனது அணியை வெற்றிக்கு வழிநடத்தியுள்ளார். தோனி களமிறங்கும்போதெல்லாம், ‘தோனி, தோனி!’ என்ற கோஷங்களால் மைதானம் முழுவதும் அதிர்ந்து ஒலிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், தங்களது ஜாம்பவான் தோனியை காண இதே ஸ்டேடியத்தில் தனது ஐபிஎல் வாழ்க்கைக்கு விடைபெற வேண்டும் ரசிகர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், தோனி அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படாத நிலையில், இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஐபிஎல்-லில் எம்.எஸ். தோனியின் அற்புதமான பயணம்

எம்.எஸ். தோனி தனது கேப்டன்சியால் ஐபிஎல்-லில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவரது கேப்டன்சியின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமின்றி, தொடர்ச்சியாக சிறப்பாகவும் செயல்பட்டது. தோனி தனது கேப்டன்சியில் மட்டுமல்ல, தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இறுதி கட்டத்தில், சென்னை அணிக்கு ரன்களை குவித்து பல முறை வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதனால்தான் தோனி உலகின் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ALSO READ: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக்..? ஷர்துல் தாக்கூர் கொடுத்த விளக்கம்!

தோனிக்கு உடற்தகுதிப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், கடந்த சில ஐபிஎல் சீசன்களாக தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்தார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களுக்கு இதுவரை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றால், அது கிரிக்கெட் உலகிற்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமையும்.

சேப்பாக்கில் நடைபெறும் இந்தப் போட்டி முழுவதுமாக எம்.எஸ். தோனிக்கு அர்ப்பணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்த மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள், பாராட்டு விழா மற்றும் ரசிகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் இடம்பெறலாம் என்பதும் தெரிகிறது.

Follow Us