AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக்..? ஷர்துல் தாக்கூர் கொடுத்த விளக்கம்!

Hardik Pandya: சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விளையாடவில்லை. அதேநேரத்தில், குழந்தை பிறந்ததன் காரணமாக சூர்யகுமார் யாதவ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மோதலில் இருந்து விலகினார். இதனால், மும்பை அணியை பும்ரா தலைமை தாங்கிய நிலையில், ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மும்பை இந்தியன்ஸ் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.

IPL 2026: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக்..? ஷர்துல் தாக்கூர் கொடுத்த விளக்கம்!
ஹர்திக் பாண்ட்யா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 May 2026 14:58 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை அணியின் வெற்றியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஹர்திக் பாண்ட்யா காயமடைந்துள்ளதாகவும், கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடுவார் என்றும் தெரிவித்தார். முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விளையாடவில்லை. அதேநேரத்தில், குழந்தை பிறந்ததன் காரணமாக சூர்யகுமார் யாதவ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மோதலில் இருந்து விலகினார். இதனால், மும்பை அணியை பும்ரா தலைமை தாங்கிய நிலையில், ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மும்பை இந்தியன்ஸ் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. இந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யா வேறொரு அணிக்கு செல்கிறாரா என்பது குறித்து ஷர்துல் தாக்கூர் விளக்கமளித்துள்ளார்.

ALSO READ: சிஎஸ்கே பிளே ஆஃப் பயணத்திற்கு ஆப்பு.. லக்னோ அசத்தல் வெற்றி!

ஹர்திக் பாண்ட்யா வேறு அணிக்கு மாற்றமா..?

ஹர்திக் மற்றொரு அணிக்கு மாற்றப்படுவதாகப் பரவி வரும் வதந்திகள் குறித்து ஷர்துல் மறுத்ததோடு, “சமூக ஊடகங்களில் வதந்திகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்” என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கடந்த 2026 மே 10ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான போட்டிக்காக ஹர்திக் பாண்ட்யா ராய்ப்பூர் வந்தார். ஆனால் அவரால் விளையாட முடியவில்லை. அவர் இப்போது மும்பையில் பயிற்சி செய்து வருகிறார்.மேலும் ஹர்திக் பாண்ட்யா கொல்கத்தாவுக்குத் திரும்பி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்களைப் போன்ற தரமான வீரர்களை நாங்கள் மிஸ் செய்கிறோம்” என்றார்.

மும்பை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த திலக் வர்மாவின் 33 பந்துகளில் 75* ரன்கள் எடுத்த ஆட்டத்தையும் ஷர்துக் தாக்கூர் பாராட்டினார். அதில், “திலக் தனது ஆட்டப் பகுதிகளையும் பந்துகளையும் சரியாகத் தேர்ந்தெடுத்து ஷாட்களை மிகவும் சிறப்பாக அடித்தார். ரியான் ரிகல்டனும் தனது அதிரடி ஷாட்களால் திலக்கிற்கு ஆதரவளித்தார். பவர்பிளேயில் நாங்கள் மிகவும் சிறப்பாகத் தொடங்கினோம், ஆனால் பவர்பிளேயின் பிற்பகுதியிலும் மிடில் ஓவர்களின் தொடக்கத்திலும் சில ரன்கள் தாராளமாகச் சென்றன. அதன்பிறகு எங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. மேலும், டெத் ஓவர்களிலும் சில ரன்கள் எடுக்கப்பட்டன” என்றார்.

ALSO READ: பிளே ஆஃப் பயணத்தை தக்க வைக்குமா KKR..? GTக்கு எதிராக இன்று மோதல்..!

ஐபிஎல் 2026 சீசனில் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்திறன்:

ஐபிஎல் 2026 சீசனில் ஹர்திக் பாண்ட்யா 8 இன்னிங்ஸ்களில் 20.85 என்ற சராசரியில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

Follow Us