AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐபிஎல் 2026 முடிந்ததும் கேப்டன் பதவியை இழக்கப்போகும் 3 வீரர்கள்? காரணம் என்ன?

IPL : 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் சில அணிகளின் மோசமான செயல்பாடு காரணமாக அணியின் கேப்டன்களை மாற்றும் முடிவு குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபிஎல் 2026 முடிந்ததும் கேப்டன் பதவியை இழக்கப்போகும் 3 வீரர்கள்? காரணம் என்ன?
ரஹானே - அக்ஷர் படேல் - ரிஷப் பந்த்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 May 2026 19:40 PM IST

ஐபிஎல் 2026 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சில அணிகளின் மோசமான செயல்பாடு காரணமாக அணியின் கேப்டன்களை மாற்றும் முடிவு குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் அடுத்த சீசனில் கேப்டன்களாக தொடர்வார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்த சீசனில் பேட்டிங்கிலும் சரி, அணியை வழிநடத்துவதிலும் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அவர் இதுவரை விளையாடிய 9 இன்னிங்க்ஸில் வெறும் 100 ரன்கள் எடுத்துள்ளார். அதில் பெரும்பாலான ரன்கள் ஒரே போட்டியில் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பந்துவீச்சிலும் அவர் தன்னை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க : IPL 2026: ஆரஞ்சு கேப் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேறிய விராட் கோலி.. யார் முதலிடம்?

இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 36 ஓவர்களை வீசிய அக்சர் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால் முக்கியமான தருணங்களில் பந்து வீச தயக்கம் காட்டியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், அணியின் பல முடிவுகளை அக்சர் படேல் எடுக்காமல் பயிற்சியாளர் ஹேமங் பதானியும் வேணுகோபால ராவும் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு புதிய கேப்டன் வர வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

ரிஷப் பந்த் மீது அழுத்தம் அதிகரிப்பு

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பந்த் மீது தற்போது மிகப்பெரிய அழுத்தம் உருவாகியுள்ளது. இந்த சீசனில் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், அந்த அணியின் தோல்விக்கு கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படாததே காரணம் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். 11 போட்டிகளில் விளையாடியுள்ள பந்த் 251 ரன்கள் எடுத்திருந்த அவர், வெறும் 9 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் வீரர்களின் தேர்வுகள் மற்றும் பேட்டிங் ஆர்டரிலும் மாற்றங்கள் செய்ததும் குழப்பங்களை விளைவித்ததாக கூறப்படுகிறது. லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர்களிடம் ரிசல்டை எதிர்பார்ப்பவர் என்றும் இதனால் அடுத்த போட்டியில் ரிஷப் பந்த் கேப்டனாக தொடர்வது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IPL 2026: டேபிள் டாப்பராக GT, RCB.. CSK, KKR பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

ரஹானேவின் எதிர்காலம் கேள்விக்குறி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டது தற்காலிக முடிவாகவே பார்க்கப்பட்டது.ஆனால் இந்த சீசனில் அவரது பேட்டிங் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரஹானே மற்றும் ரகுவன்ஷி இருவரும் டாப் ஆர்டரில் களமிறங்கினாலும், டி20 போட்டிகளுக்கு தேவையான அதிரடி ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை எனன விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 237 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருந்தது. மேலும் 37 வயதாகும் ரஹானே இனி புதிய டி20 ஃபார்மட்டுக்கு ஏற்ப விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us