IPL 2026: டேபிள் டாப்பராக GT, RCB.. CSK, KKR பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?
IPL 2026 Playoffs: நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த ஐபிஎல் 2025 ஆண்டு பட்டத்தை வென்று தந்த ரஜத் பதிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, 11 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளுடன் வலுவான நிலையில் இருப்பதுடன், மிகச் சிறந்த நிகர ரன் விகிதத்தையும் கொண்டுள்ளது. 2026 மே 13ம் தேதியான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தால், பிளேஆஃப் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் (IPL 2026) லீக் சுற்று முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், முதல் நான்கு இடங்களுக்கான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர, மீதமுள்ள 8 அணிகள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு எல்லாம் முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் திடீரென மீண்டு வந்து, பிளே ஆஃப் பட்டியலில் நீடித்து வருகின்றனர். இதற்கிடையில், தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்விகளுக்குப் பிறகு தற்போது அழுத்தத்தில் உள்ளது.
ALSO READ: 600க்கு மேற்பட்ட போலி இணையதளங்கள்.. ஜோராக விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
வலிமையாக திகழும் ஆர்சிபி – ஜிடி:
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கடந்த ஐபிஎல் 2025 ஆண்டு பட்டத்தை வென்று தந்த ரஜத் பதிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, 11 போட்டிகளில் இருந்து 14 புள்ளிகளுடன் வலுவான நிலையில் இருப்பதுடன், மிகச் சிறந்த நிகர ரன் விகிதத்தையும் கொண்டுள்ளது. 2026 மே 13ம் தேதியான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தால், பிளேஆஃப் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளை பொறுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் 2 இடங்களுக்குள் தங்களது இடத்தை உறுதி செய்யலாம்.




இதற்கிடையில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 12 போட்டிகளில் இருந்து 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குஜராத் அணி தனது கடைசி 2 போட்டிகளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் குஜராத் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்துடன் லீக் சுற்றை முடிக்கும்.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் இதுவரை நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் இருந்து 13 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், பஞ்சாப் அணிக்கு இப்போது மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தது 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதன்படி, நாளை அதாவது 2026 மே 14ம் தேதியான நாளை தர்மசாலாவில் மும்பைக்கு எதிரான போட்டி அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் இப்போது, சிஎஸ்கே மீண்டும் பிளேஆஃப் பந்தயத்தில் களமிறங்கியுள்ளனர். தங்களது கடைசி 8 போட்டிகளில் பெற்ற 6 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. அதன்படி, சென்னை தனது மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இருப்பினும் லக்னோ, ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகள் எளிதானவை அல்ல, எனவே, வெற்றிக்காக சிஎஸ்கே அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தொடர்ச்சியாக 6 தோல்விகளுக்குப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கதை முடிந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், அஜிங்க்யா ரஹானேவின் அணி திடீரென மீண்டு வந்தது. தங்களது கடைசி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, கேகேஆர் அணி பிளே ஆஃப் பந்தயத்தில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், கேகேஆர் அணியால் அதிகபட்சமாக 17 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதன் பொருள், கொல்கத்தா அணி வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல், மற்ற போட்டிகளின் முடிவுகளுக்கும் காத்திருக்க வேண்டும்.
ALSO READ: அணியுடன் லக்னோவிற்கு கிளம்பும் தோனி.. சிஎஸ்கே CEO கொடுத்த ஹிண்ட்!
கடைசி 3 போட்டிகளும் ஈடன் கார்டன்ஸில் நடைபெறவுள்ளதால், கொல்கத்தா அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகள் முன்னிலையில் இருப்பது போல் தோன்றினாலும், ஐபிஎல் தொடரில் எந்த நேரத்திலும் மீண்டு வருவது சாத்தியம் என்பதை சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போன்ற அணிகள் நிரூபித்துள்ளன. அடுத்த 10 நாட்கள் புள்ளிப் பட்டியலை மட்டுமல்ல, பல அணிகளின் தலைவிதியையும் மாற்றும்.