IPL 2026: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவாரா? வெளியான முக்கிய அப்டேட்!
MS Dhoni Returns: எம்.எஸ்.தோனி, கால் தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தோனி வருகைக்காகக் காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், ஐபிஎல் 2026 சீசனின் நடுப்பகுதியில், தோனி சிஎஸ்கே அணியுடன் பயணிக்கத் தொடங்கினார்.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) தொடக்கத்தில் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது மீண்டெழுந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) தனது 12-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற 2026 மே 15ம் தேதி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை ரசிகர்களுக்கு நல்ல விஷயமாக இந்தப் போட்டியில் எம்.எஸ். தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, எம்.எஸ். தோனி சிஎஸ்கே அணியுடன் லக்னோவிற்கு புறப்படத் தயாராகிவிட்டார்.
ALSO READ: சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 போட்டிதான்.. பிளே ஆஃப்க்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?
லக்னோவுக்கு புறப்படும் எம்.எஸ்.தோனி:
எம்.எஸ்.தோனி, கால் தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தோனி வருகைக்காகக் காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், ஐபிஎல் 2026 சீசனின் நடுப்பகுதியில், தோனி சிஎஸ்கே அணியுடன் பயணிக்கத் தொடங்கினார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான வெளியூர் போட்டிகளின் போது தோனி, சிஎஸ்கே அணியுடன் பயணம் மேற்கொண்டு, பயிற்சியும் மேற்கொண்டார்.




தோனி முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் தோனியின் காயம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. தோனி மீண்டும் அணிக்குத் திரும்ப முயன்றபோது காயம் மோசமடைந்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய வெற்றி கூட்டணியை தோனி சீர்குலைக்க விரும்பவில்லை என்றும் சிலரும் கூறுகின்றனர். இந்தக் காரணத்தினால், அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடந்த போட்டிக்கு எம்.எஸ்.தோனி அணியுடன் பயணிக்கவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி, டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
எம்.எஸ்.தோனி அணியுடன் லக்னோவுக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், வருகின்ற 2026 மே 15ம் தேதி நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் தோனி இடம்பெறுவாரா என்பதை உறுதியாக கூற முடியாது.
ALSO READ: மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய நேரம் இது.. ஹர்திக் எதிராக கிளம்பிய குரல்!
பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற சிஎஸ்கே இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்?
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இத்தொடரில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 16 புள்ளிகளை இலக்காகக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற இன்னும் 4 புள்ளிகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் 2ல் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்.