AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய நேரம் இது.. ஹர்திக் எதிராக கிளம்பிய குரல்!

Mumbai Indians Captain: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர்களில், ஹர்திக் பாண்டியா தான் மிகக் குறைந்த வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளார். ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 37 போட்டிகளில் விளையாடி, அவற்றில் 15 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

IPL 2026: மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய நேரம் இது.. ஹர்திக் எதிராக கிளம்பிய குரல்!
மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 May 2026 18:14 PM IST

ஐபிஎல் 2026 சீசனுக்கு (IPL 2026) பிறகு மும்பை இந்தியன்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. வருகின்ற ஐபிஎல் 2027 சீசனில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகத் தொடர்வாரா போன்ற கேள்விகளும் அடுத்தடுத்து எழுகிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஹர்திக், மும்பை இந்தியன்ஸை (Mumbai Indians) விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும்,  கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா ஏற்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிடுள்ளது.

ALSO READ: மும்பையை அன் ஃபாலோ செய்தாரா ஹர்திக்..? அணிக்குள் புகைச்சலா?

ஹர்திக் பாண்ட்யா நீக்கமா..?

ஜஸ்பிரித் பும்ரா ஆட்டத்தை நன்கு புரிந்து வைத்திருப்பதால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வர வேண்டும் என விரும்புவதாக சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறினார். அப்போது, பும்ராவைப் பாராட்டிய மஞ்ச்ரேகர், ” பும்ரா ஒரு பேட்ஸ்மேனின் மனநிலையுடன் விளையாடுவார், ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு, கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவார். அவரைப் பொறுத்தவரை, பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரையாவது வழிநடத்த தகுதியானவர்” என்றார்.

ஹர்திக்கின் வெற்றிக்கு நெஹ்ராதான் காரணமா..?

சஞ்சய் மஞ்ச்ரேகர் மேலும் கூறுகையில், ”ஹர்திக் பாண்டியாவைத் தாண்டி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஹர்திக்கை மும்பைக்கு அழைத்து வந்த முடிவு இதுவரை பலனளிக்கவில்லை. மேலும் இப்படி சிந்திப்பது ஹர்திக்கிற்கும் நியாயமில்லை. இது ஒரு தொகுப்பு ஒப்பந்தம் போன்றது. ஹர்திக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவையும் நீங்கள் அழைத்து வந்திருக்க வேண்டும். பும்ராவுக்கு கேப்டனாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அது ஒரு டெஸ்ட் கேப்டனாக இருப்பதைப் போன்ற அழுத்தத்தை ஏற்படுத்தாது.” என்றார்.

ALSO READ: 200 ரன்கள் குவித்தும் அதிக தோல்வி.. மோசமான சாதனை படைத்த பஞ்சாப்!

மும்பை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்திறன்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர்களில், ஹர்திக் பாண்டியா தான் மிகக் குறைந்த வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளார். ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 37 போட்டிகளில் விளையாடி, அவற்றில் 15 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல்லில் கால் வைத்தபோது தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா, முதல் வருடமே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஹர்திக் கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். அதன்பிறகு, கடந்த 2024ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரேட் மூலம் ஹர்திக் பாண்ட்யாவை வாங்கியது.

 

Follow Us