AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் விதிமீறல்! ஒரே தவறு.. வரிசையாக சிக்கிய 6 கேப்டன்கள்..!

Axar Patel Fined: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மெதுவான ஓவர் வீதத்தை எடுத்துகொண்டது. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) டெல்லி அணியின் முதல் மெதுவான ஓவர் ரேட் விதிமீறல் இதுவாகும். இதன் விளைவாக கேப்டன் அக்சர் பட்டேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

IPL 2026: ஐபிஎல்லில் விதிமீறல்! ஒரே தவறு.. வரிசையாக சிக்கிய 6 கேப்டன்கள்..!
டெல்லி கேப்டன் அக்சர் படேல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 May 2026 14:42 PM IST

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals) அணி, நேற்று அதாவது 2026 மே 12ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 210 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தை பெற்றாலும், 5வது இடத்தில் களமிறங்கிய அக்சர் படேல், 30 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து, டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இருப்பினும், போட்டியின்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி செய்த தவறுக்காக, அக்சர் படேலுக்கு 1.2 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மெதுவான ஓவர் வீதத்தை எடுத்துகொண்டது. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) டெல்லி அணியின் முதல் மெதுவான ஓவர் ரேட் விதிமீறல் இதுவாகும். இதன் விளைவாக கேப்டன் அக்சர் பட்டேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ALSO READ: முந்திச்சென்ற டெல்லி.. சிஎஸ்கே நிலைமை என்ன?.. ஐபிஎல் புள்ளி பட்டியல் லேட்டஸ்ட்!

ஐபிஎல் வெளியிட்ட அறிக்கை:

இந்தியன் பிரீமியர் லீக்கின் 55வது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெதுவான ஓவர் ரேட்டை மேற்கொண்டதாக டெல்லி கேப்டன் அக்சர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது, குறைந்தபட்ச ஓவர் ரேட் மீறல்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22-க்கு இணங்க செய்யப்பட்டுள்ளது. நடந்து வரும் ஐபிஎல் 2026 சீசனில் இது அவரது அணியின் முதல் மீறல் என்பதால், அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிளேஆஃப் சுற்று பயணத்தில் நீடிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்:

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியதன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. டெல்லி அணி ஆடிய 12 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. 10 புள்ளிகளுடன், டெல்லி அணி புள்ளி அட்டவணையில் 7வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி அணியால் 14 புள்ளிகளை எட்ட முடியும். இந்த நிலையிலும் கூட, முதல் நான்கு அணிகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது 14 புள்ளிகளுடன் நீடிக்க வேண்டும், மேலும் நிகர ரன் ரேட்டை பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை சிக்கிய 6 கேப்டன்கள்:

ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் ஐபிஎல் 2026 சீசனில் ஸ்லோ ஓவர் ரேட்டின் கீழ் அபராதம் விதிக்கப்பட்ட 5வது கேப்டன் என்ற மோசமான சாதனையை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக, ஷ்ரேயாஸ் ஐயர் 2 முறையும், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்டியா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் தலா 1 முறை அபராதங்களை சந்தித்துள்ளனர். இதனால், இந்த சீசனில் ஐபிஎல் அணிகளுக்கு மெதுவான ஓவர்-ரேட் ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

ALSO READ: ’அவன் அப்படியே சாகட்டும்’.. தவறான வார்த்தையை பயன்படுத்தினாரா பத்ரிநாத்..? கிளம்பிய எதிர்ப்பு!

டெல்லி அணியின் அடுத்த போட்டி எப்போது..?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அடுத்த போட்டியானது வருகின்ற 2026 மே 17ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, வருகின்ற 2026 மே 24ம் தேதி தங்களது இறுதிப் போட்டியில், டெல்லி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, ஐபிஎல் 2026 சீசனில் இறுதி லீக் கட்டப் போட்டியாகவும் அமைந்துள்ளது.

Follow Us