AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Womens T20 World Cup: 8 வது முறையாக டி20 உலகக் கோப்பை பைனல்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பயணம்!

Aus Women vs WI Women: ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காமல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் ஆடிய 5  போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், பின்னர் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

ICC Womens T20 World Cup: 8 வது முறையாக டி20 உலகக் கோப்பை பைனல்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பயணம்!
பைனலில் ஆஸ்திரேலிய மகளிர்Image Source: ICC/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Jun 2026 22:26 PM IST

ஐசிசி 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் (ICC Womens T20 World Cup) முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணி இன்று அதாவது 2026 ஜூன் 30ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதன்படி, மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெறுவது இது 8வது முறையாகும். இது உலகக் கோப்பையின் 10வது சீசன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி (Australia Womens Team) இதுவரை ஆறு டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

ALSO READ: ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி.. நீக்கப்பட்ட விக்கெட் கீப்பர்.. காரணம் இதுதானா?

125 ரன்களுக்குள் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர்:


ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தீர்மானித்தது, அது சரியான முடிவாகவும் அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களுக்குள் சுர்ய்ண்டது. கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ஹெய்லி மேத்யூஸ் 30 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். ஆஸ்திரேலியா சார்பில் சோஃபி மோலினக்ஸ், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான பெத் மூனி, 36 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 61* ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை பைனலுக்கு அழைத்து சென்றார். பெத் மூனி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் 4வது விக்கெட்டுக்கு 36 பந்துகளில் 63* ரன்கள் சேர்த்து, அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் சினெல் ஹென்றி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ALSO READ: ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மகளிர்.. முதலிடத்தில் இந்த பந்துவீச்சாளரா?

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு

ஆஸ்திரேலியா தோல்வியே சந்திக்காமல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் ஆடிய 5  போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், பின்னர் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். லீக் சுற்றில், ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியா வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். 3வது போட்டியில், ஆஸ்திரேலியா நெதர்லாந்தை 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனைத் தொடர்ந்து, 4வது போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 113 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். லீக் சுற்றின் 5வது மற்றும் கடைசி போட்டியில், ஆஸ்திரேலியா இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Follow Us