AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC T20 Rankings: ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மகளிர்.. முதலிடத்தில் இந்த பந்துவீச்சாளரா?

ICC Womens T20 Rankings Update: மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வால் முதலிடத்திலும், இங்கிலாந்தின் சார்லி டீன் 2ம் இடத்திலும் நீடிக்கின்றனர். இந்தியாவின் சிறந்த டி20 பேட்டர்களான ஸ்மிருதி மந்தனா 5ம் இடத்திலும், ஷஃபாலி வர்மா 6ம் இடத்திலும் உள்ளனர்.

ICC T20 Rankings: ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மகளிர்.. முதலிடத்தில் இந்த பந்துவீச்சாளரா?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jun 2026 17:10 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான (Womens T20 World Cup 2026) சமீபத்திய தரவரிசையை வெளியிட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. ஆனால், ஸ்ரீ சரணியின் ஆதிக்கம் இதனால் பாதிக்கப்படவில்லை. இந்தியாவின் மிகவும் இளம் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணி (Shree Charani) உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளராகத் தொடர்கிறார். அதேநேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் நீடிக்கின்றனர்.

ALSO READ: இந்தியா உட்பட 9 அணிகள்.. 2028 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!

தொடரும் ஸ்ரீ சரணியின் ஆதிக்கம்:


இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, கடந்த வாரம் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளராகத் தொடர்ந்து நீடிக்கிறார். சரணி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கும் மற்றொரு பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா மட்டுமே ஆவார். தற்போது இங்கிலாந்தின் லாரன் பெல், 7வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறி, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பேட்ஸ்மேன்களில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:

மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வால் முதலிடத்திலும், இங்கிலாந்தின் சார்லி டீன் 2ம் இடத்திலும் நீடிக்கின்றனர். இந்தியாவின் சிறந்த டி20 பேட்டர்களான ஸ்மிருதி மந்தனா 5ம் இடத்திலும், ஷஃபாலி வர்மா 6ம் இடத்திலும் உள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தற்போது 10-வது இடத்தில் உள்ளார். ரிச்சா கோஷ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் பேட்டிங் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளனர்.

இதற்கிடையில், டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீராங்கனையான தீப்தி சர்மா, தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஷஃபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 22வது இடத்தைப் பிடித்துள்ளார். அணிகளின் தரவரிசையைப் பார்க்கும்போது, ​​ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2ம் இடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன.

ALSO READ: பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை.. 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் நேரடியாக தகுதி!

2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டி அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸ் மோதவுள்ளன. அதேசமயம் 2வது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோதுகின்றன.

Follow Us