Womens T20 World Cup 2028: இந்தியா உட்பட 9 அணிகள்.. 2028 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
2028 Women T20 World Cup Qualified Teams: 2026 டி20 உலகக் கோப்பையின் குழுச் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது. இருப்பினும், அது அடுத்த அதாவது 2028 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதியைப் பெற்றுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் 2028 உலகக் கோப்பையை நடத்துவதோடு, நடத்தும் நாடு என்ற முறையில் அடுத்த உலகக் கோப்பையிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையை (2026 ICC Womens T20 World Cup) இங்கிலாந்தும் வேல்ஸும் நடத்துகின்றன. நாக்-அவுட் சுற்றுக்கான தொடக்கத் தேதி நெருங்கி வரும் நிலையில், இந்த உலகக் கோப்பையில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) லீக் ஸ்டேஜ் போட்டிகளிலேயே வெளியேறியது. இதுபோன்ற சூழ்நிலையில், வருகின்ற 2028ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு மொத்தம் 9 அணிகள் தகுதி பெற்றுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், மோசமான ஆட்டத்திறன் காரணமாக 2026 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானும், 2028 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.
ALSO READ: வென்ற ஆஸ்திரேலியா.. உலகக் கோப்பையில் வெளியேறிய இந்தியா!




8 அணிகளுக்கு நேரடி நுழைவு
2026 டி20 உலகக் கோப்பைக்கான 12 அணிகள், தலா 6 அணிகள் கொண்ட 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. 2026 உலகக் கோப்பை புள்ளி அட்டவணையில் இரு குழுக்களிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2028 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் வெளியேற்றப்பட்டதால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் அடுத்த 2028 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
பாகிஸ்தான் தகுதி பெற்றது எப்படி..?
🚨 WORLD CUP IN PAKISTAN 🚨
ICC Women’s T20 World Cup 2028 will be played in Pakistan
Qualified Teams:
Group A: India, Australia, South Africa, BangladeshGroup B: England, West Indies, Sri Lanka, New Zealand
Pakistan qualified as a host and Ireland due to higher rankings pic.twitter.com/zr7PXzgRCP
— Ajay Jadeja (@AjayJadeja171) June 29, 2026
2026 டி20 உலகக் கோப்பையின் குழுச் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது. இருப்பினும், அது அடுத்த அதாவது 2028 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதியைப் பெற்றுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் 2028 உலகக் கோப்பையை நடத்துவதோடு, நடத்தும் நாடு என்ற முறையில் அடுத்த உலகக் கோப்பையிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதன்மூலம், 2028 டி20 உலகக் கோப்பையில் தனது இடத்தை உறுதிசெய்த ஒன்பதாவது அணியான பாகிஸ்தான் மாறியது.
ALSO READ: இந்திய அணிக்கு தகர்ந்த உலகக் கோப்பை கனவு.. விலகுகிறாரா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்?
வருகின்ற 2028ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும் 10வது அணி, வருகின்ற 2026 ஜூலை 6ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தற்போது உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள அயர்லாந்து, தற்போதைய தரவரிசையின் அடிப்படையில் தகுதிபெறும் நல்ல நிலையில் உள்ளது. 2028 உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும். கடைசி 2 அணிகள் உலகத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தீர்மானிக்கப்படும்.