AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தேடிவந்த காதல்.. ‘நோ’ சொல்ல மனசில்லை.. 21 பெண்களை மணந்த யாசகரின் விசித்திர கதை!!

Beggar Marries 21 Women After They Proposed: பெண்கள் தேடிவந்து காதலைச் சொல்லி திருமணத்திற்கு அழைத்ததால், அவர்களின் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக 21 பெண்களைத் திருமணம் செய்து கொண்ட யாசகர். பங்களாதேஷில் வெளிவந்துள்ள இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தேடிவந்த காதல்.. ‘நோ’ சொல்ல மனசில்லை.. 21 பெண்களை மணந்த யாசகரின் விசித்திர கதை!!
21 பெண்களைத் திருமணம் செய்து கொண்ட நபர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Oct 2026 12:44 PM IST

அக்டோபர், 09: இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணத்தைச் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதற்கே பலரும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், பங்களாதேஷில் யாசகம் எடுத்து வாழ்க்கை நடத்தி வரும் நபர் ஒருவர் 21 பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களாகவே தன்னைத் தேடிவந்து காதலைத் தெரிவித்துத் திருமணம் செய்யக் கோரியதால், அவர்களின் மனம் புண்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் திருமணத்திற்குச் சம்மதித்ததாக அந்த நபர் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த விசித்திர விவகாரம் தற்போது காட்டுத் தீ போல் பரவி வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

21 திருமணங்களின் விசித்திர பின்னணி:

பங்களாதேஷைச் சேர்ந்த மோரு மியா என்ற 35 வயது நபருக்கே இந்த விசித்திர அனுபவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இவருக்கு அவரது குடும்பத்தினர் முறைப்படி முதல் திருமணத்தைச் செய்து வைத்துள்ளனர். முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அடுத்தடுத்துப் பல பெண்கள் மோரு மியாவைத் தேடிவந்து தங்கள் விருப்பத்தையும் காதலையும் தெரிவித்துள்ளனர். தான் பெண்களைத் தேடிச் செல்லவில்லை என்றும், தன்னை நாடிவந்த பெண்களின் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அனைவரையும் அடுத்தடுத்துத் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனைவிகளின் பெயர்கள் கூட நினைவில் இல்லை:

21 பெண்களைத் திருமணம் செய்து கொண்டபோதிலும், மோரு மியாவுக்கு தனது மனைவிகள் அனைவரின் பெயர்களையும் கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்பது மற்றொரு சுவாரசியமான உண்மையாகும். ஊடகவியலாளர்கள் அவரிடம் மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பாரூல் போன்ற வெறும் 8 மனைவிகளின் பெயர்களை மட்டுமே அவரால் கூற முடிந்தது. தம்மைக் காதலித்த பெண்களில் பலரும் தன்னை விட வயதில் மூத்தவர்கள் என்றும், சமுதாயம் அவர்களைக் கைவிட்டு விடக் கூடாது என்ற நன்னோக்கிலும், அவர்களின் மனம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே அவர்களை ஏற்றுக்கொண்டதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை: தாய் கண்ணீர் கோரிக்கை – என்ன நடந்தது?

தினமும் ஒரு மனைவியுடன் யாசகம்:

வாழ்க்கை நடத்துவதற்காகத் தெருக்களில் யாசகம் எடுத்து வரும் மோரு மியா, தனது மனைவிகளை ஒரே வீட்டில் தங்க வைக்காமல் தனித்தனி வீடுகளில் தங்க வைத்துள்ளார். மேலும், தினமும் யாசகம் எடுக்கச் செல்லும்போது ஒவ்வொரு நாளும் ஒரு மனைவியை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தத் தகவல் பங்களாதேஷ் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் “ஒரு கல்யாணம் பண்ணவே இங்க ஆள் அலை மோதும் போது, இவருக்கு என்னப்பா இப்படி ஒரு அதிர்ஷ்டம்” என்று நகைச்சுவையாகவும் வியப்பாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Follow Us