AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எல் நினோவின் கடும் தாக்கம்! இந்துகுஷ் இமயமலையில் பனிச்சரிவு- வெள்ளப்பெருக்கு.. வெளியான எச்சரிக்கை!

Hindu Kush Himalayan Flood Warned : கடுமையான எல் நினோ தாக்கத்தால் ஆப்கானிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள இந்துகுஷ் இமயமலையில் கடுமையான வெள்ளப்பெருக்கு, பனிச்சரிவு, நிலச்சரிவுஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல் நினோவின் கடும் தாக்கம்! இந்துகுஷ் இமயமலையில் பனிச்சரிவு- வெள்ளப்பெருக்கு.. வெளியான எச்சரிக்கை!
இந்துகுஷ் இமயமலை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Nov 2026 13:07 PM IST

நேபாளத்தில் கடுமையான எல் நினோ காரணமாக இந்து குஷ் இமயமலை பகுதியில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும், இதனால் குளிர்காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. காத்மண்டுவை தளமாகக் கொண்ட சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகம் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் வளிமண்டல இயற்பியல் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்த இந்துகுஷ் இமயமலை குளிர்கால முன்னறிவிப்பு 2026, நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் அதிக ஈரப்பதம் நிலவும் என தெரிவித்துள்ளது. மேற்கு இமயமலை பகுதிகளில் கனமழையால் குறிப்பிட்ட இடங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் பணி சரிவுகள் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக வலிமையான எல் நினோவாக மாற 60 சதவீதம் வாய்ப்பு

அதே வேளையில், அந்தப் பகுதியில் சில இடங்களில் வறட்சி நிலவும் மற்றும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறது. கடந்த 1957 பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து இது மிக வலிமையான எல்நினோவாக மாறுவதற்கு சுமார் 60 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகவும், வலிமையானது முதல் மிக வலிமையானது வரையிலான எல் நினோ நிலவுவதாகவும் அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வானிலை நிகழ்வானது இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக மழையையும், உயரமான பகுதிகளில் பனிப்பொழிவால் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறது.

மேலும் படிக்க: உலகில் மீண்டும் அணு ஆயுத போர் நிகழக் கூடாது.. முத்தரப்பு கூட்டத்தில் 3 நாட்டு தலைவர்கள்!

உயரமான மலையில் பனிப்பாறைகள், உறைபனி

நேபாளம் மற்றும் பூட்டானில் உயரமான மலை பனிப்பாறைகள் மற்றும் நிரந்தர உறைபனியில் ஏற்பட்ட மாற்றங்களுடன் தொடர்புடைய பேரழிவுகளை உள்ளடக்கிய, குறிப்பாக அழிவுகரமான பருவமழை காலத்தை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இமயமலை நாட்டை தாக்கிய பேரழிவு கரமான போதேகோஷி வெள்ளத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த வெள்ளத்தால் நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக அந்த நாட்டுக்காக 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இயல்பை விட அதிகமான பனிப்பொழிவு இருக்கும்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளில் இயல்பை விட ஆழமான பனிப்பொழிவு இருக்கும் என்றும், அதே வேளையில் பூட்டான் மற்றும் சீனாவின் கிழக்கு சிசாங்கின் சில பகுதிகளில் ஆழமற்ற பனிப்பொழிவு இருக்கலமா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று நீரோட்டத்தை தக்க வைப்பதிலும், வரும் ஆண்டுக்கான நீர் இருப்பை தீர்மானிப்பதிலும் பனியின் ஆழம் முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் படிக்க: வங்கதேசத்தில் பெரும் கலவரம்! அவாமி லீக் தலைவர்கள் 30 வீடுகள் தீவைத்து எரிப்பு.. பரபரப்பு பின்னணி!

Follow Us