டாஸ் மூலம் தேர்வு செய்யப்பட்ட தலைவர்.. அமெரிக்க தேர்தலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
Coin Toss Decides Florida Election Winner | அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் ஒரே அளவிலான வாக்குகளை பெற்றனர். இந்த நிலையில், ஒருவரை வெற்றியாளராக தேர்வு செய்ய நாணயத்தை சுண்டி இறுதி முடிவு எடுக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாஷிங்டன், நவம்பர் 21 : அமெரிக்காவின் (America) புளோரிடா (Florida) மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு பெண் வேட்பாளர்கள் ஒரே சமமான வாக்குகளை பெற்ற நிலையில், டாஸ் போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு கூட கூடுதலாக பெற்றால் வெள்ளி பெற்றதாக அறிவிக்கப்படும் நிலையில், ஒரே சமமான வாக்குகள் பெற்ற வேட்பாளர்களுக்கு இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ் போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீச் நகர கமிஷ்னர் பதவிக்கான தேர்தல்
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் பீச் நகர கமிஷனர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 03, 2026 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜெனிபர் லாக்னர், லிசா ஹெரால்டு ஆகிய ஆகிய பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் தேர்தலில் பெறப்பட்ட வாக்குகளை எண்ணிய நிலையில், இரண்டு பேரும் தலா 3,162 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில், தேர்தல் அதிகாரிகள் மறுவாக்கு எண்ணிக்கையும் நடத்தினர். ஆனாலும் முடிவு எட்டாமல் இருந்துள்ளது.
இதையும் படிங்க : இலங்கைக்கு ரூ. 60 லட்சம் பீடி இலைகள் கடத்தல் முயற்சி.. சினிமா பாணியில் நடந்த சேஷிங்.. 2 பேரை தூக்கிய க்யூ பிரிவு போலீஸ்!




நாணயத்தை டாஸ் செய்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது
இருவரும் ஒரே வாக்குகளை பெற்று இருந்த நிலையில், புளோரிடா மாகாண சட்டத்தின்படி நாணயத்தை சுண்டிவிட்டு வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இரண்டு வேட்பாளர்களின் முன்னிலையில், நாணயம் சுண்டிவிடப்பட்டது. மொத்தம் மூன்று சுற்றுகள் நாணயம் சுண்டிவிடப்பட்டு, அதில் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெறுபவர் வெள்ளியாளராக அறிவிக்கப்படுவார்.
இதையும் படிங்க : வயது 23.. சாதனை உலகளவில்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பானின் செல்லப்பிள்ளை பூட்டா!
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜெனிபர் லாக்னர்
இந்த நாணயத்தை சுண்டிவிடும் போட்டியில் முதலில் லிசா ஹெரால்டு டாஸ் போடும்போது தலை விழும் என தேர்வு செய்தார். ஆனால், பூ விழுந்ததால் ஜெனிபர் லாக்னருக்கு முதல் சுற்றில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2வது சுற்றில் ஜெனிபர் லாக்னர் தலை விழும் என தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தபடியே தலை விழுந்த நிலையில், இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் முடிவும் இரண்டு பேரும் ஒரே வாக்குகளை பெற்ற நிலையில், இந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.