அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்துக்களின் எண்ணிக்கை.. 5வது இடத்திற்கு செல்லும்.. ஆய்வில் முக்கிய தகவல்!
US Hindu Population Soars | மக்கள் தொகை குறித்து பியூ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் , 2070 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மக்கள் தொகை அதிகரித்து அதிக இந்து மக்கள் தொகை கொண்ட 5வது நாடாக அமெரிக்கா மாறும் என கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன், நவம்பர் 19 : 2027 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக இந்துக்களை கொண்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா (America) 5வது இடத்தை பிடிக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது உலக அளவில் அதிக இந்துக்களை கொண்ட 5வது நாடாக இந்தோனேசியா (Indonesia) உள்ள நிலையில், அதனை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா அந்த இடத்தை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்து மக்களின் மக்கள் தொகை குறித்து வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் அதிக இந்துக்கள் வசிக்கும் நாடுகள்
உலகில் பல்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் மூன்று முக்கிய மதங்களாக இந்துத்துவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை தான் பியூ தற்போது வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் சுமார் 111 கோடி இந்துக்கள், நேபாளத்தில் 2.35 கோடி இந்துக்கள், வங்கதேசத்தில் 1.31 கோடி இந்துக்கள், பாகிஸ்தானில் 50 லட்சம் இந்துக்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், உலல அளவில் அதிக இந்து மக்கள் தொகை கொண்ட நாடுகளாக இவை நான்கும் இருந்துள்ளன.
இதையும் படிங்க : அக்டோபரில் 26 டன் கொள்முதல்! சீனா அதிகளவு தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது ஏன்? இந்தியா எந்த இடத்தில் உள்ளது!
அதிகரிக்கும் இந்துக்களின் எண்ணிக்கை – பியூ அறிக்கை
2020 ஆம் ஆண்டின் நிலவரத்தை படியே, உலக அளவில் அதிக இந்துக்களை கொண்ட நாடுகளில் பட்டியலில் முதல் 4 நாடுகளில் மாற்றம் இருக்காது என பியூ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 129 கோடியாக அதிகரித்து முதல் இடத்திற்கு செல்லும் என்றும், பாகிஸ்தானில் ஏற்கனவே உள்ள இந்துக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக மாறி சுமார் 1 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிலிப்பைன்ஸ் பாரம்பரிய உடையில் அசத்திய பிரதமர் மோடி.. ராமாயண நாட்டிய நிகழ்ச்சி முதல் பாரம்பரிய விருந்து வரை
7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வரும் அமெரிக்கா
இந்த பட்டியலில் அமெரிக்கா தான் மிகவும் ஆச்சர்யமூட்டும் எண்ணிக்கையை கொண்டுள்ளது. காரணம், 2020 ஆம அண்டில் சுமார் 30.4 லட்சம் இந்துக்கள் உடன் 7வது இடத்தில் இருந்த அமெரிக்கா, வரும் 2070 ஆம் ஆண்டு 5வது இடத்திற்கு முன்னேறும் என்றும் அமெரிக்காவில் குடியேற்றம் அதிகரித்து அங்கிருக்கும் இந்துக்களின் எண்ணிக்கை 40 லட்சம் அதிகரித்து மொத்தமாக சுமார் 74 லட்சம் என்ற அளவை இந்து மக்கள் தொகை எட்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.