AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை: தாய் கண்ணீர் கோரிக்கை – என்ன நடந்தது?

Tamil Worker Death Sentence : சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அவரது தாய் கண்ணீர் மல்க கோரிக்கைவிடுத்துள்ளார்.

சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை: தாய் கண்ணீர் கோரிக்கை – என்ன நடந்தது?
சிவராசா அனோஜன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Oct 2026 20:01 PM IST

சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்காக, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதற்கிடையில் தனது மகன் செய்த தவறை மன்னித்து அவரை விடுவிக்க வேண்டும் என சிவராசாவின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளா்.

சவுதியில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை

இலங்கையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு கருத்து, இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்து யாத்திரையின்போது ஒருவர் நாயை உதைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. அப்போது ஒரு பயனர் இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலளித்த அனோஜன், நபிகள் நாயகம் குறித்து தமிழில் அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அனோஜன் அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, மன்னிப்புக் கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். ஆனால், அதற்குள் அவர் கமெண்ட் செய்த பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டுடன் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் ஓனருக்கு புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அவர் சவுதி அரேபியா காவல்துறையினரிடம் தெரிவிக்க, கடந்த 2026 ஜூலை மாதம் சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டார். அவரது போனும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்த சவுதி அரேபியா நீதிமன்றம், முதலில் அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சமும் அபராதமும் விதித்தது. இதனை எதிர்த்து, செப்டம்பர் 17, 2026 சவுதி அரேபியா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சைபர் குற்றச் சட்டத்தின் கீழ் விசாரிக்க கூடாது என்றும், ஷரியா சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என அரசுத் தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனோஜனின் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து சவுதி அரேபியா அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?

இந்த நிலையில் சிவராசா அனோஜனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பிபிசிக்கு அவரது தாய் அளித்த அளித்த பேட்டியில், தனது மகன் செய்த தவறை மன்னித்து, அவரைத் தங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சவுதி அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, இலங்கையிலிருந்து ஒரு சட்டக் குழு இந்த வாரம் சவுதி அரேபியா செல்கிறது. சவுதியில் இரண்டு சட்ட நிறுவனங்கள் அனோஜனின் வழக்கைக் கையாண்டு வருவதாகவும், அவர்களைச் சந்தித்து வழக்கு குறித்து விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us