பிளேக் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் பலி.. டெஸ்ட் டியூப் வெடித்தது தான் காரணமா?
Plague Lab Researcher Died Due To Pneumonia | ரஷ்யாவில் பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மரணத்தை தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ, அக்டோபர் 05 : ரஷ்யாவில் (Russia) பிளேக் நோய் (Plague Disease) தொடர்பான ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 28 வயது இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரை ரஷ்யா மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளது. அந்த ஆய்வகத்தில் வைக்கப்பட்டு இருந்த டெஸ்ட் டியூப் எதிர்பாராத விதமாக உடைந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் கூறும் நிலையில், இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் திடீர் பலி
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பகுதியில், பிளேக் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகம் ஒன்று உள்ளது. இந்த ஆய்வகத்தில் டாரியா ஷிபிலோவா எந்த பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் கடுமையான நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கிய நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் அக்டோபர் 05, 2026 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க : நடுவானில் கடத்தப்பட்ட இஸ்ரேல் விமானம்.. சண்டையிட்டு பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி!
ஆய்வகத்தில் வெடித்த டெஸ்ட் டியூப்
இந்த மரணத்திற்கு பின்னால் அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது டாரியா பணியாற்றி வந்த இர்குடாஸ்க் ஆய்வகத்தில் செப்டம்பர் 25, 2026 அன்று உயிருள்ள பிளேக் பாக்டீரியா மாதிரியை கையாளும்போது அது வைக்கப்பட்டு இருந்த டெஸ்ட் டியூப் உடைந்ததாக ரஷ்யா ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக பிளேக் நோய் தொற்று காரணமாக டாரியா பலியாகியிருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க : நேபாளத்தில் மீண்டும் ஒரு பேரழிவு: நொடிகளில் சரிந்த மலைகள் – வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் தான், ஆராய்ச்சியாளரின் உயிரிழப்புக்கும் அவரது தொழில்முறை பணிக்கும் தொடர்புடைய நுண்ணுயிரிகள் அவரது உடலில் காணப்படவில்லை என்று ரஷ்யாவின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.