நடுவானில் கடத்தப்பட்ட இஸ்ரேல் விமானம்.. சண்டையிட்டு பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி!
Indian Pilot Foils Dubai-Tel Aviv Plane Hijack | துபாயில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றுக்கொண்டு இருந்த விமானம் நடு வானில் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்திய விமானி ஒருவர் நடுவானில் சண்டையிட்டு பயணிகளை பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.
டெல் அவிவ், செப்டம்பர் 30 : துபாயில் (Dubai) இருந்து இஸ்ரேல் (Israel) நோக்கி சென்றுக்கொண்டு இருந்த விமானம் ஒன்று நடுவானில் கடத்தப்பட்ட நிலையில், இஸ்ரேல் பயணிகளை இந்திய விமானி ஒருவர் நடுவானில் சண்டையிட்டு காப்பாற்றியுள்ளார். இத்தகைய வீரமிகு செயலை செய்த இந்திய விமானியை இஸ்ரேல் பாராட்டியுள்ளது. இந்த நிலையில், நடுவானில் விமானம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
180 பயணிகளுடன் துபாயில் இருந்து புறப்பட்ட விமானம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி சுமார் 180 பயணிகளுடன் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் ஒன்று இன்று (செப்டம்பர் 30, 2026) காலை புறப்பட்டுள்ளது. இந்த விமானம் கிளம்பிய ஒருசில நிமிடங்களில், விமானிகள் அமர்ந்திருந்த அறையில், விமானிகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் இருந்து இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை சமிங்கை கொடுக்கப்பட்டது. அப்போது விமானம் சுமார் 15,000 அடியில் தாழ்வாக பறந்த நிலையில், ஸ்குவாக் 7500 அதாவது விமான கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இலங்கையில் இதென்ன அநியாயம்.. தமிழக மீனவர்களின் படகுகள் உடைப்பு.. கடற்படையினர் அட்டூழியம்!
அவசர ஆலோசனை மேற்கொண்ட பெஞ்சமின் நெதன்யாகு
இந்த நிலையில் தான், விமானத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழல் குறித்து அந்த நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஒருசில நிமிடங்களில் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் விமானம் ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் எடுத்து சவுதி அரேபியா நோக்கிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க : நிலவில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்.. 100 கி.மீ மேற்பரப்பு சிதைவு.. விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
பின்னர் அந்த விமானம் சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.