AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி.. எப்போது, எங்கே பார்க்கலாம்..?

India vs NZ 2nd Test Preview: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது. 2வது போட்டி தொடர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹாக்லி ஓவல் ஸ்டேடியத்தில் 2026 நவம்பர் 27ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியில், ஜடேஜா மற்றும் சிராஜ் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது

IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி.. எப்போது, எங்கே பார்க்கலாம்..?
இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2026 16:02 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்தத் தொடரில் இன்னும் 2 போட்டிகளே மீதமுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடர் வெற்றியாளராக அறிவிக்கப்படும். வெலிங்டனில் நடைபெற்ற முதல் போட்டியில், டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இணைந்து 43 ஓவர்கள் பேட்டிங் செய்து, நியூசிலாந்து அணிக்கு போட்டியை சமன் செய்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத இந்திய அணியில் (Indian Cricket Team) முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இடம்பெறாதது கேள்வியை எழுப்பியது.

ALSO READ: இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா.. இறுதி வரை நீடித்த த்ரில் போராட்டம்!!

இதையடுத்து, 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் சிராஜ் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார்களா என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், முதலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எப்போது, ​​எங்கே, எந்த நாளில் நடைபெறும் என்பதை தெரிந்துகொள்வோம்.

2வது டெஸ்ட் போட்டி எப்போது, ​​எங்கே நடைபெறும்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் ஸ்டேடியத்தில் வருகின்ற 2026 நவம்பர் 27ம் தேதி முதல் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3:30 மணிக்குத் தொடங்கும்.

இந்த போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நடைபெறும். போட்டியின் நேரலை ஒளிபரப்பு சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்.

நேருக்குநேர் சாதனை:

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. 2020-ல் நடைபெற்ற அந்தப் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுபுறம், நியூசிலாந்து இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9 முறை வெற்றியும், 4 முறை தோல்வியும், 3 முறை சமனும் கண்டுள்ளது.

இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், குர்னூர் ப்ரார், முகமது சிராஜ், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

ALSO READ: WTCல் 3000 ரன்களை கடந்த கில் – பண்ட்.. சாதனை பட்டியலில் இடம்!

நியூசிலாந்து அணி:

டாம் லேதம் (கேப்டன்), ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன், நாதன் ஸ்மித், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், டெவன் கான்வே, டாம் பிளண்டெல், மாட் ஹென்றி, பிளேயர் டிக்னர்

 

Follow Us