AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும்! உச்சநீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

Annamalai: நாளை மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, நீதிமன்ற உத்தரவின்படி அரசு அதிகாரிகள் மலைத் தூணுக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் அந்த இடம் யாருக்கும் சொந்தமாகிவிடாது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும்! உச்சநீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Nov 2026 16:03 PM IST

நவம்பர் 23, 2026: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அரசு அதிகாரிகள் நேரடியாக மலைத் தூணுக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, திருப்பரங்குன்றம் தீப விவகாரம், தமிழக அரசின் நடவடிக்கைகள், காங்கிரஸ் கட்சி மற்றும் செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும்

அப்போது அவர் கூறுகையில், கடந்த முறையும் தீபம் ஏற்றலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. தற்போது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. மலைத் தூணில் அரசு அதிகாரிகள் மட்டுமே சென்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க: நூலக புத்தக கொள்முதலில் 3 ஆண்டுகளாக நடந்த மெகா முறைகேடு.. உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பகீர் தகவல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைய விடமாட்டோம் என்று கூறிவிட்டு, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் குறுக்கீடுகளை ஏற்படுத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் புரிதல் இல்லாமல் தமிழக வெற்றிக் கழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

தீபம் ஏற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு

தமிழகம் கலவர பூமியாக மாறாது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறுகிறார். ஆனால், இன்று மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பது யார்? நாளை மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, நீதிமன்ற உத்தரவின்படி அரசு அதிகாரிகள் மலைத் தூணுக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் அந்த இடம் யாருக்கும் சொந்தமாகிவிடாது என்றார்.

மேலும் படிக்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார் விவகாரம்

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகார் விவகாரத்தில், ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை என்றும், அவரது கணவர்தான் புகார் அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார். ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அண்ணாமலை

காங்கிரஸ் கட்சி குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரு சதவீதம்கூட வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சி தற்போது அரசியல் ரீதியாகச் செயலிழந்த நிலையில் உள்ளது. தலையில் பேன் இருப்பதுபோல் யாரோ ஒருவரின் உடலில் சவாரி செய்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வாழ்ந்து கொண்டிருக்கிறது எனக் கடுமையாக விமர்சித்தார்.

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் – சிபிஐ விசாரணை கோரிக்கை

தொடர்ந்து செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, சிறுமி மாயமாகி 40 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் ஈகோ பார்க்காமல் சிபிஐ விசாரணை கோரி கடிதம் எழுத வேண்டும். சிபிஐ தானாக முன்வந்து விசாரணைக்கு வர முடியாது. தமிழக முதலமைச்சர்தான் அதற்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுத வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

Follow Us