இலங்கையில் இதென்ன அநியாயம்.. தமிழக மீனவர்களின் படகுகள் உடைப்பு.. கடற்படையினர் அட்டூழியம்!
Tamil Nadu Fishermen Boats Destroying : தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு களை இலங்கை கடற்படையினர் பொக்லைன் இயந்திரம் மூலமாக உடைத்தனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளி ப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழகத்தில் ராமநாதபுரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடி படகுகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். சில நேரங்களில், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டி அடிப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டில் மயிலட்டி துறைமுகம், வவுனியா, மன்னார் மற்றும் காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் படகுகள் பொக்லைன் மூலமாக உடைப்பு
இலங்கையில் மட்டும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200- க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான இந்த படகுகள் இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் நிலையில் மயிலட்டி துறைமுகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான பல்வேறு படகுகளை இலங்கை கடற்படையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருச்செந்தூரில் பயங்கரம்.. நடுரோட்டில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் அரிவாள் மோதல்.. அலறியடித்து ஓடிய மக்கள்!




மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் தேவதாஸ் கூறியதாவது: மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி படகுகள் விளங்கி வருகிறது. இதனை, அத்துமீறி பறிமுதல் செய்து வைக்கும் இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் திரும்ப ஒப்படைக்காமல் அரசுடைமையாக்கி வைத்துள்ளது.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அத்துடன், அதனை பொக்லைன் இயந்திரம் மூலமாக உடைத்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியதாக. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் உடனடியாக மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும். அதனை முறைப்படி சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” திடீர் பெயர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா? நெகிழ்ச்சி பின்னணி!