AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. கொடூர செயலில் ஈடுபட்ட மனைவி உள்பட இருவர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Sub Inspector Murder In Chennai : சென்னையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை அவரது மனைவி உள்பட இருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .

காவல் உதவி ஆய்வாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.. கொடூர செயலில் ஈடுபட்ட மனைவி உள்பட இருவர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 21 Sep 2026 08:30 AM IST

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜ் ( 58 வயது). இவர், கடந்த 1992- ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு செல்வராணி ( 32) என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில், அவரை பிரிந்து, ராஜை 2- ஆவது திருமணம் செய்துள்ளார். தம்பதி இருவரும் நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் 1- ஆவது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். செல்வராணிக்கு ஏற்கனவே முதல் திருமணத்தில் ஒரு மகளும், 2- ஆவது திருமணத்தில் ஒரு மகனும், மகளும் இருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

தீயில் எரிந்த நிலையில் கிடந்த எஸ். ஐ.

இந்த நிலையில், சம்பவத்தன்று ராஜ், செல்வராணி புரசைவாக்கத்தில் உள்ள ஜவுளி கடையில் துணி எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கினர். அப்போது, ராஜ் தூங்கிய அறையில் புகை வெளியேறியது. உடனே, செல்வராணி வந்து பார்த்தபோது, ராஜ் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராணி சத்தம் போட்டதில், அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் அஜித் ரசிகர்கள் – கொடி அறிமுகம்

அறை முழுவதும் வீசிய பெட்ரோல் வாசனை

தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில், ராஜ் உடலிலும், அறை முழுவதும் பெட்ரோல் வாசனை வீசியது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், செல்வராணியிடம் விசாரித்ததில், அவர் போக்சோ வழக்கில் சிக்கி இருப்பதால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், போலீசாருக்கு செல்வராணி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஒருவருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

இதன் காரணமாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததை ராஜ் கண்டித்துனர். இதில், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் தேவா என்பவரின் உருவம் பதிவாகி இருந்தது. இது குறித்து விசாரித்ததில் அந்த நபரும், செல்வராணியும், உதவி ஆய்வாளர் ராஜ்ஜை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ் – பரபரப்பு சம்பவம்

Follow Us